ஹமாஸை அப்படி சொல்லாதீங்க.. பாலஸ்தீன தலைவரின் முகத்துக்கு நேராக ரிஷி சுனக் சொன்ன 'அந்த' வார்த்தை
காசா: பாலஸ்தீனம் மீது கடந்த 15 நாட்களாக இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய கிழக்கில் இராஜதந்திர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பாலஸ்தீன தலைவரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, "ஹமாஸ் பாலஸ்தீனத்திற்காக பேசவில்லை" என விமர்சித்துள்ளார்.
பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்த குழுதான் ஹமாஸ். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி பயங்கரவாத தாக்குதல்களை தொடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக கொடூரமான பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால் தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவுக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் சப்ளையை இஸ்ரேல் துண்டித்திருப்பதால் சுமார் 23 லட்சம் காசா மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களை தெற்கு நோக்கி, எகிப்தின் ராஃபா எல்லைக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் கூறி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளும், ஐநாவும் உதவி பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த பொருட்கள் கடந்த சில நாட்களாக ராஃபா எல்லையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
பாதிப்பு கடல் அளவுக்கு இருக்கும் நிலையில் உதவி பொருட்கள் கடுகளவுக்குதான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் எரிபொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதிக்காததால் மருத்துவமனையில் இயங்கும் ஜெனரேட்டர்கள் முற்றிலுமாக செயலிழந்திருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தரை மார்க்கமாக காசாவுக்குள் ஊடுருவ முயன்று வருகிறது. இதற்கு களத்தை தயார் படுத்த வேண்டும் என்பதற்காக காசா மீதான வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மேலும் அதிகரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இஸ்லாமிய நாடுகள் இந்த தாக்குதலை தடுக்க முயன்று வருகின்றன.
இந்நிலையில்தான் மத்திய கிழக்கில் இராஜதந்திர சுற்றுப்பயணத்தை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மேற்கொண்டிருந்தார். இந்த பயணத்தின்போது எகிப்திய அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி மற்றும் பாலஸ்தீனிய அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை கெய்ரோவில் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, "ஹமாஸ் செய்தது பயங்கரவாத செயல். அதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. அதேபோல பாலஸ்தீனிய மக்களை ஹமாஸ் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என இரு நாடுகளும் அமைதியாக வாழ வேண்டும் என்பதுதான் பிரிட்டனின் விருப்பம். காசாவின் குடிமக்களுக்கு உதவுவதற்கும், அங்குள்ள மோசமான மனிதாபிமான சூழ்நிலையைத் தணிப்பதற்கும் பிரிட்டன் முயற்சிகளை மேற்கொள்ளும்" என்று பேசியுள்ளார்.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications