அமெரிக்கா: பெண்ணை 15 ஆண்டுகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த நபர்
கலிபோர்னியா: அமெரிக்காவில் தனது உறவுக்கார பெண்ணை 15 ஆண்டுகளாக வீட்டுக்கு பின்னால் இருக்கும் கொட்டகையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த நபருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவூல் ஓசுவா(52). அவர் தனது உறவுக்கார பெண்ணுக்கு 12 வயது இருக்கும்போதில் இருந்து அவரை தனது வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தனது வீட்டுக்கு பின்னால் ஒரு கொட்டகையை கட்டி அப்பெண்ணை அங்கு வைத்து பலாத்காரம் செய்ததுடன் அவரை கட்டாயப்படுத்தி அங்கேயே தங்க வைத்துள்ளார். அவர் இப்படி 15 ஆண்டுகளாக அந்த பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது ரவூலின் குடும்பத்தாருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணுக்கு 27 வயது இருக்கையில் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல குடும்பத்தார் உதவி செய்தனர். அப்பெண்ணும் தப்பிச் சென்று போலீசாரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்தார்
இதையடுத்து போலீசார் ரவூல் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications