கனடா தேர்தல் 2025: மீண்டும் ஆட்சியை பிடிக்கும் லிபரல் கட்சி..சவாலளித்த கன்சர்வேட்டிவ்வுக்கு 2ம் இடம்
ஒட்டாவா: கனடா நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று அதிகாலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலில் லிப்ரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் போட்டியில் இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்தது.கனடாவில் ஆட்சியைப் பிடிக்க மொத்தமுள்ள 343 இடங்களில் 172 இடங்களைப் பெற வேண்டும், ஆனால் ஆளும் லிபரல் கட்சி 168 இடங்களை கைபற்றியது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 144 இடங்களில் வென்றுள்ளது. இதனால் லிபரல் கட்சி பிற கட்சியை சேர்த்து ஆட்சி அமைக்கிறது.
2015 ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். உள்நாட்டு பிரச்சினை, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து கனடா மீதான வரி உயர்வு ஆகியவற்றின் காரணமாக ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கனடாவில் லிபரல் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் தொடர்ந்து கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும் லிபரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 14ஆம் தேதி அவர் 24 ஆவது பிரதமராக பதவி ஏற்ற நிலையில் அக்டோபர் மாதம் வரை கனடா நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் இருக்கிறது.

இருந்தும் முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டு கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். அதன்படி ஏப்ரல் 28ஆம் தேதி நேற்று கனட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. லிபரல் கட்சி சார்பாக மார்க் கார்னி,பியர் பொய் லிப்ரோ கன்சர்வேட்டிவ் கட்சி, என்டிபி சார்பில் ஜக்மீத் சிங், பசுமை இணை தலைவராக ஜனாத்தான் உள்ளிட்டோர் களமிறங்கினர்.
மொத்தம் 343 எம்பிக்களுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் 172 இடங்களில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சியை அமைப்பார்கள். கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் 61 சதவீத வாக்குகளும், 2021 தேர்தலில் 63 சதவீத வாக்குகளும் பதிவானது, அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டு 67% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது,
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளின் படி பல இடங்களில் லிப்ரல் கட்சியை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கூறப்படுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு முழுமையாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியைத் தொடர்ந்து பிடிக்குமா?, பியர் பொய்லிவ்ரின் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த தேர்தல், வெறும் கனடாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கே அல்ல, ஒரு வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிலைப்பாட்டுக்கே எதிராக நடத்தப்பட்ட பொதுச் சோதனையாகவும் பார்க்கப்படுகிறது. சிபிசி நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் லிபரல் கட்சி 42.8% ஆதரவு பெற்றுள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி 38.8% ஆதரவு பெற்றுள்ளது. இது கனடா அரசியல் வரலாற்றிலேயே மிகப்பெரிய திருப்பமாக பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இன்று அதிகாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. தொடக்கத்திலேயே பல இடங்களில் லிபரல் கட்சியே முன்னிலை பெற்றது. இறுதியில் ஆளும் லிபரல் கட்சி 168 தொகுதிகளிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 144 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதர இடங்களில் பிற கட்சிகளும் வெற்றி பெற்றன. பெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்களில் தற்போதைய லிபரல் கட்சி 168 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆனாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சிகளை சேர்ந்தவர்களை அரவணைத்து லிபரல் கட்சி ஆட்சியைபிடிக்கஉள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications