பாகிஸ்தானில் தாலிபான்களின் தலைவர் அஸ்மத்துல்லா ஷாஹீன் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பின் தலைவர் அஸ்மத்துல்லா ஷாஹீன் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் அமைப்பின் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ஆளில்லா போர் விமான தாக்கதலில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி பலியானார். இதையடுத்து அந்த அமைப்பின் இடைக்கால தலைவராக அஸ்மத்துல்லா ஷாஹீன் நியமிக்கப்பட்டார். அஸ்மத்துல்லா வடக்கு வஜிரிஸ்தானின் தலைநகரான மிரான்ஷாவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள தர்கா மண்டி என்ற கிராமத்தில் இன்று காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேறு ஒரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அஸ்மத்துல்லா, அவரது கார் டிரைவர் மற்றும் பாதுகாவலர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். அஸ்மத்துல்லா இறந்துவிட்டதை அவரது குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான்கள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் ஆட்சியை கவிழ்க்க போராடி வருகின்றனர். அப்படி ஆட்சியை கவிழ்த்துவிட்டு நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தால் தேடப்படும் 20 பேரில் அஸ்மத்துலாவும் ஒருவர். அவரை பிடித்து தருவோருக்கு ரூ. 74 லட்சத்து 46 ஆயிரத்து 60 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 2009ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications