'நாங்க மட்டும்தான் அனுப்பினோமா? நீங்க அனுப்பலையா?' அமெரிக்க உளவு பலூன்கள்.. பட்டியலை நீட்டிய சீனா
லூன் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான மோதல் போக்கு மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பெய்ஜிங்: சமீபத்தில் அமெரிக்க வான் பரப்பில் அனுமதியின்றி நுழைந்து வேவு பார்த்ததாக கூறி சீனாவுக்கு சொந்தமான பலூன் ஒன்றை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில், தங்களது வான் பரப்பிலும் அமெரிக்காவுக்கு சொந்தமான பலூன்கள் தொடர்ந்து பறந்திருக்கிறது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் அணு ஆயுத சோதனைகள் நடைபெறும் விமான தளத்திற்கு மேலே வெள்ளையாக ஏதோ ஒரு பொருள் பறந்துக்கொண்டிருந்ததை பெண்டகன் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை ஆய்வு செய்ததில் இது ஒரு பலூன் என்றும், சீனாவுக்கு சொந்தமானது எனவும் கண்டுபித்தனர். இந்த பலூன் விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில் இது குறித்து சீனா, "இது முழுக்க முழுக்க வானிலை ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பலூன்.
தன்னிச்சையாக இயங்கும் அமைப்பைக் கொண்ட இந்த பலூன் எங்களுடனான தொடர்பை ஒரு சில மாதங்களாக இழந்துவிட்டது. எனவே, எங்களால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை. காற்றின் திசை மாறுபாட்டின் காரணமாக பலூன் இங்கு வந்திருக்கிறது" என்று விளக்கமளித்திருந்தது. இதனை ஏற்க மறுத்த அமெரிக்கா எங்கள் அனுமதியின்றி வான் எல்லைக்குள் நுழைந்தது தவறு என்று கூறியது. பின்னர் பலூன் குறித்து முழு ஆய்வை மேற்கொண்டது. ஆய்வில் இது சூரிய சக்தியில் இயங்கும் பலூன் என்றும், சுமார் 45 ஆயிரம் அடி உயரத்தில் இது பறந்துக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது.

பலூன்
சாதாரண விமானங்கள் 20-25 அடி வரை பறக்கும் நிலையில் இதுபோன்ற பலூன்கள் 45 ஆயிரம் அடி உயரத்தில் நிலையாக நிற்கும் தன்மை கொண்டவை. இப்போதெல்லாம் செயற்கைக்கோள் மூலம் உளவுப் பார்ப்பது சாதாரணமாகவே நடந்து வருகிறது. ஆனால் இதனால் நிலையாக ஒரு இடத்தில் நின்று உளவு பணியை செய்ய முடியாது. எனவே உளவு பணிக்காக பலூன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை பலூன்கள் 45 நாட்கள் வரை ஒரே இடத்தில் இருக்கும் திறன் கொண்டவையாகும். மட்டுமல்லாது இது ரேடாரிலும் சிக்காது. பூமியிலிருந்து ஏவுகணை கொண்டும் இதனை தாக்க முடியாது. இதனை தயாரிப்பதற்கும் குறைந்த செலவுதான் ஆகும் என்பதால் இந்த வகை பலூன்களை உலக நாடுகள் பயன்படுத்துகின்றன.

தானியங்கி பலூன்
இந்நிலையில் சீனாவின் பலூன் சூரிய வெளிச்சத்தில் கிடக்கும் ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் தன்மை கொண்டவையாகும். தன்னிச்யைான இயக்கத்தை கொண்ட இந்த பலூன்கள், தான் சேகரித்த தகவல்களை தனது உரிமையாளருக்கு ரேடியோ ஒளிக்கற்றை மூலமாக அனுப்பி வைக்கும் என்பதை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானிகள் இவ்வளவு சிறப்பு வாய்ந்த பலூன் எதற்கு தங்களுடைய ரகசிய விமான தளத்திற்கு மேல் பறந்துக்கொண்டிருக்கிறது என கேள்வியெழுப்பினர். இதனையடுத்து அதிபர் ஜோபைடன் பலூனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். இதற்கிடையில் காற்றின் வேகம் காரணமாக பலூனும் கடல் உள்ள பகுதியை நோக்கி சென்றது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி F-22 விமான் பலூனை சுட்டு வீழ்த்தியது.

பதிலடி
ஆனால் விஷயம் இத்துடன் நின்றுவிடவில்லை. மேற்குறிப்பிட்டதைப்போல எற்கெனவே அமெரிக்காவும், சீனாவும் பாம்பும் கீரியுமாக இருந்த நிலையில், இந்த சம்பவம் இருவருக்குமான விரிசலை மேலும் அதிகரித்தது. பலூன் கடந்த 4ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆனால் இதற்கு அடுத்த நாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு செல்ல இருந்தார். பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சீனா சும்மா இருக்கவில்லை. மாறாக, "அமெரிக்காவின் இந்த முடிவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று எச்சரித்தது.

குற்றச்சாட்டு
உலக அளவில் இரண்டும் மிகப்பெரிய நாடுகள். ஒருவேளை இரு நாடுகளுக்குள் மோதல் போக்கு நீடித்தால் அதனால் மூன்றாம் நாடுகள் அனைத்தும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். சூழல் இப்படி இருக்கையில், நாங்க மட்டுமா பலூன் அனுப்பினோம்? ஏன் நீங்க அனுப்பலையா? என ஒரு பட்டியலை எடுத்து நீட்டியிருக்கிறது சீனா. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் 10க்கும் மேற்பட்ட பலூன்களை அமெரிக்கா தங்கள் நாட்டு எல்லையில் பறக்கவிட்டதாகவும் அதனை தாங்கள் சுமூகமாக முறையில் எதிர்கொண்டோம் என்றும் சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications