தொற்று நோய் வரலாற்றை திருத்தி எழுத சீனா முயற்சி.. மக்கள் பார்வைக்கு வந்த 2 கொரோனா தடுப்பூசிகள்
பெய்ஜிங்: சீனா தனது உள்நாட்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை முதன்முறையாக மக்களின் பார்வைக்கு பெய்ஜிங் வர்த்தக கண்காட்சியில் வைத்துள்ளது. சீன நிறுவனங்களான சினோவாக் பயோடெக் மற்றும் சினோபார்ம் இந்த தடுப்பூசிகளை தயாரித்துள்ளன.
இரண்டுமே இதுவரை சந்தைக்கு வரவில்லை. ஆனால் இதன் தயாரிப்பாளர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்படும் என்று நம்புகிறார்கள்.
சினோவாக் மருத்து நிறுவனத்தின் பிரதிநிதிஇதுபற்றி கூறுகையில், தங்கள் நிறுவனம் ஏற்கனவே "தடுப்பூசி தொழிற்சாலையின் கட்டுமானத்தை முடித்துவிட்டது என்றும் ஆண்டுக்கு 300 மில்லியன் டோஸ் உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறினார்.

திரண்ட மக்கள்
பெய்ஜிங் வர்த்தக கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள மருந்தை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். சீனாவில் ள் கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து பல்வேறு கதைகள் உலாவரும் நிலையில் மருந்தை ஆச்சர்யத்தோடு பார்த்து சென்றனர்.

தொற்று நோய் பரவல்
சீனா கொரோனா தொற்றுநோயை ஆரம்பத்தில் கையாண்ட விதம் , உலக நாடுகளால் மிக மோசமாக விமர்சிக்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது கொரோனா. உலகமே இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் சீனா கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை, சீனத் தலைமை மற்றும் சீனாவின் அடையாளமாக உள்நாட்டு தடுப்பூசிகளை மக்கள் பார்க்கிறார்கள்.

பொதுவுடைமை
மே மாதத்தில், அதிபர் ஜி ஜின்பிங் சீனாவால் உருவாக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் உலகிற்கு பொதுவானதாக ஆக்கவோம் என்று உறுதி அளித்தார். இந்நிலையில்
சினோபார்ம் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக ஆன்டிபாடிகளை ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறது. இருப்பினும் இறுதி முடிவு சோதனைகளுக்குப் பிறகு மட்டுமே தெரியவரும். விலை அதிகம் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

எப்படி சமாளிக்கும்
ஒவ்வொரு இரண்டு டோஸுக்கும் 1,000 யுவான் (6146) க்கும் குறைவாக செலவாகும் என்று அந்நாட்டு ஊடக அறிக்கை கூறியுள்ளது இதனிடையே சீன இராணுவ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட மற்றொ தடுப்பூசியும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை சமாளிக்க முடியும் என்று சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.7 பில்லியன் டோஸ்
கடந்த மாத நிலவரப்படி, உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் குறைந்தது 5.7 பில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கொரோனாவிற்கு எதிரான பரவலான நோய்த்தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டு ஜூன் வரை கிடைக்க வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications