சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி?
தெஹ்ரான்: தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என ஈரான் சொல்லி வந்த நிலையில், அது திடீரென தனது நிலைப்பாட்டை ஏற்று 2 வாரப் போர் நிறுத்தத்திற்கு ஓகே சொல்லியுள்ளது. இந்த விவகாரத்தில் சீனா நேரடியாகத் தலையிட்டதாகவும் அதன் பிறகே ஈரான் தனது முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வரக் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அமெரிக்கா அழுத்தம் கொடுத்தது. ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடர்ந்ததால் அமெரிக்காவிலேயே போருக்கு எதிர்ப்பு அதிகரித்தது. இதனால் நிலைமையைச் சமாளிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப் பாகிஸ்தான் மூலம் ஈரானுக்கு பிரஷர் கொடுக்கப்பட்டது.

முடிவுக்கு வந்த போர்
இருப்பினும், தற்காலிக போர் நிறுத்தத்தை எல்லாம் ஏற்க முடியாது.. நிரந்தர போர் நிறுத்தம் தான் தங்களுக்கு வேண்டும் என ஈரான் முதலில் சொல்லி வந்த நிலையில், அவர்கள் இந்த இரு வாரப் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும், இது தற்காலிக போர் நிறுத்தம் என்றாலும் கூட ஹார்முஸை திறக்கவும் ஒப்புக்கொண்டுள்ளனர். இது மிகப் பெரிய ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
தலையிட்ட சீனா
இதற்கிடையே திரைமறைவில் என்ன நடந்தது என்பது தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த விவகாரத்தில் சீனா தலையிட்டுள்ளது. அதன் பிறகே போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று ஈரான் அதிகாரிகள் சீனாவின் தலையீட்டை உறுதி செய்ததாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
என்ன நடந்தது!
ஈரானின் முக்கிய நட்பு நாடான சீனாவின் கடைசி நேரத் தலையீட்டால் மட்டுமே பாகிஸ்தானின் இரு வாரப் போர் நிறுத்த திட்டத்திற்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது. பதட்டங்களைத் தணிக்கவும், கொஞ்சம் நெகிழ்வுத்தன்மையைக் காட்டவும் சீனா ஈரான் வலியுறுத்தியதாம். சீனாவின் கோரிக்கையை ஏற்றே தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.. இந்த திட்டத்திற்கு ஈரான் புதிய சுப்ரீம் லீடர் மொஜ்தபா காமேனி ஒப்புதல் அளித்ததாகவும் அதன் பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதாகவும் ஈரான் தரப்பு கூறுகிறது.
கடந்த சில வாரங்களாகவே போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்திய டிரம்ப், காலக்கெடுவையும் கூட தொடர்ச்சியாக நீட்டித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் டிரம்ப் இறுதி எச்சரிக்கையை விடுத்தார். அவர் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில், "இன்று இரவு ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும், அதை மீண்டும் கொண்டு வர முடியாது.. அதேநேரம் அற்புதம் நடந்து போரும் முடியலாம்" என்பது போலப் பதிவிட்டிருந்தார். இந்தச் சூழலில் தான் போர் முடிவுக்கு வருவதாக இரு தரப்பும் அறிவித்துள்ளது.
வளைகுடா போர்
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான போரை அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கியது. இந்த போரில் இதுவரை ஈரானில் 1,900-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல்- ஹிஸ்பொல்லா மோதல் நடைபெறும் லெபனானில் 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன். இந்த மோதலால் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோல இஸ்ரேலில் 23 பேரும், 13 அமெரிக்கப் படை வீரர்களும் இந்த போரில் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications