விமானத்தை தேடும் பணி தாமதம் அடைய சீனா தான் காரணமா?
பெர்த்: மாயமான மலேசிய விமான தேடல் பணி தாமதம் அடைந்துள்ளதற்கு சீனா தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு கிளம்பிய விமானம் எம்.ஹெச். 370 தெற்கு இந்திய பெருங்கடலுக்குள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் 154 பேர் சீனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நெருக்கடி
விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள் என்பதால் விமானத்தை கண்டுபிடிக்க சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்
விமானத்தை பல நாடுகளும் தேடி வந்தபோது இந்திய பெருங்கடலில் பொருட்கள் மிதந்ததை தங்கள் நாட்டு செயற்கைக்கோள் புகைப்படம் எடுத்து அனுப்பியது என்று சீனா தான் முதலில் தெரிவித்தது. இறுதியில் அந்த பொருட்களுக்கும் விமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிய வந்தது.

சிக்னல்
இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடுகையில் கருப்புப் பெட்டியில் இருந்து வரும் சிக்னலை கண்டறிந்ததாக சீனா தான் முதலில் தெரிவித்தது. ஆனால் அது ஒன்றும் இல்லாமல் போனது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய விமானம் மற்றும் கப்பல் ஆகியவை சிக்னல்களை கண்டறிந்த இடத்தில் தான் விமான தேடல் தீவிரமாக நடந்து வருகிறது. சீன கப்பல் சிக்னலை கண்டுபிடித்த இடம் முக்கியத்துவம் பெறவில்லை.

பொய்யா?
சீனா தனது திறமையை, தொழில்நுட்ப முன்னேற்றத்தை உலகிற்கு தெரிவிக்க இவ்வாறு தகவல்களை அளித்துள்ளதே தவிர அவற்றால் எந்தவித பயனும் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தேடல்
அனைவரும் விமானத்தை கண்டுபிடிக்க விரும்புகின்றனர். தவறான தகவல்களால் விசாரணை தாமதமாகியுள்ளது என்று பெயர் தெரிவிக்க விரும்பாத மூத்த பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோபம்
சீன அரசின் தவறான தகவல்களால் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் விமான தேடலில் ஈடுபட்டுள்ள பிற நாடுகள் கோபம் அடைந்துள்ளன என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications