"வெளியே போங்க..!" சீன மாநாட்டில் உள்ளே புகுந்த அதிகாரிகள்.. ஜி ஜின்பிங் கிட்ட வந்து.. ஒரே பரபரப்பு
பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அங்கு நடந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் ஒற்றை ஆட்சி முறையே அமலில் இருக்கிறது. இதனால் அங்கு மாற்றுக்கட்சிகளும் இல்லை.. தேர்தலும் இல்லை.
பல ஆண்டுகளாக அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே சீன அதிபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு நடைபெறுகிறது.

சீனா
இந்த மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மொத்தம் 6 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த மாநாட்டின் இறுதியில் தான் பொலிட் பீரோ உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் பின்னர் அவர்கள் மூலமே அதிபர் தேர்வு செய்யப்படுவார். சீனாவில் நடக்கும் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

மாநாடு
இந்த முறையும் ஜி ஜின்பிங் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் நீடிக்க உள்ளார். கடந்த பல ஆண்டுகளில் அங்கு எந்தவொரு தலைவரும் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருந்தது இல்லை. ஆனால், முதல்முறையாக ஜி ஜின்பிங் இப்போது மூன்றாவது முறையாக அதிபராக உள்ளார்.

ஹு ஜிண்டாவோ
கடந்த 2012இல் ஜி ஜின்பிங் முதல்முறையாக அதிபராகப் பொறுப்பு ஏற்றார். அவருக்கு முன் புஹு ஜிண்டாவோ என்பவரே அதிபராக இருந்தார். இப்போது நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் ஹு ஜிண்டாவோ கலந்து கொண்டு இருந்தார். அவர் ஜி ஜின்பிங் அருகே அமர்ந்து இருந்தார். இன்று காலை கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ஹு ஜிண்டாவோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

என்ன நடந்தது
இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஜி ஜின்பிங் அருகே அமர்ந்து இருக்கும் ஹு ஜிண்டாவோ அருகே வரும் சில அதிகாரிகள் அவரை தங்களுடன் வருமாறு கூறுகிறார்கள். இருப்பினும், அவர்களுடன் செல்ல ஹு ஜிண்டாவோ முதலில் மறுக்கிறார். அவர்களிடம் ஹு ஜிண்டாவோ எதோ சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஜி ஜின்பிங்கிடமும் எதையோ அவர் சொல்கிறார்.

கண்டு கொள்ளவில்லை
இருப்பினும், அவரை ஜி ஜின்பிங் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதையடுத்து ஹு ஜிண்டாவோ வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்படுகிறார். இது அத்தனையும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது. அவரை அழைத்துச் செல்லும் போது ஜி ஜின்பிங் கண்டுகொள்ளவில்லை. 2012இல் இவர் ராஜினாமா செய்ததாலேயே ஜி ஜின்பிங்கால் அதிபராக முடிந்தது குறிப்பிடத்தக்கது.

ஜி ஜின்பிங்
கடந்த 2012 முதலே அதிபர் பதவியில் தொடரவே ஜி ஜின்பிங் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார். ஊழல் ஒழிப்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர் தனது எதிர்ப்பாளர்களைக் கட்சியில் இருந்தே நீக்கினார். அதேபோல ஒருவர் இரு முறைக்கு மேல் அதிபர் பதவியில் இருக்க முடியாது என்ற விதிமுறைகளையும் 2018இல் அவர் சத்தமில்லாமல் நீக்கினார். இப்போது தன்னை அதிபராக்கியவரையே வலுக்கட்டாயமாக அரங்கில் இருந்து வெளியேற்றி உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications