பல கல்யாணம் செய்வதெல்லாம் இந்தப் பெண்ணுக்கு பலகாரம் சாப்பிடுவது போல.. இதுவரை 26!
பீஜிங்: சீனாவில் பெண் ஒருவர் கொஞ்சம் கூட சலிக்காமல், 26 திருமணங்கள் செய்து கொண்டுள்ளார். சீன அரசின் குடும்பக் கட்டுப்பாடு சட்டம்தான் இந்தப் பெண்ணை இப்படி அடிக்கடி கல்யாணம் செய்ய வைத்துள்ளது.
ஜியாங்சு மாகாணத்தின் சுயாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த 40 வயதுப் பெண்மணி. சமீபத்தில் தான் இவர் தனது முன்னாள் கணவர் மூலம் கருவுற்றிருப்பதைத் தெரிந்துகொண்டார்.
இதனால் தற்போதைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பழைய கணவரையே மறுமணம் செய்துகொண்டார். இவரது கதையைப் படித்தால், சூரியனைச் சுற்றி வரும் பூமியைப் போல சுற்றுவதை நீங்களே ஃபீல் பண்ணுவீர்கள்.

அதை விட்டுட்டு இதுக்குப் போன பிறகு:
இந்தப் பெண் தனது பழைய கணவரை விவாகரத்து செய்து விட்டு புதிய கணவரை மணந்தவர். அதன் பிறகுதான் இவர் கர்ப்பமானதை அறிந்தார். அது பழைய கணவர் மூலம் வந்த வித்தாகும்.

அடடா சிக்கலாகிப் போச்சே:
பழைய கணவருக்கு ஒரு குழந்தை கூட கிடையாது. இதனால் அவர் தான் குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். பழைய மனைவியை மறுபடியும் மணக்கவும் சம்மதித்தார்.

ஒரு குடும்பம் ஒரு குழந்தை:
சீனாவில் சமீப காலம் வரை "ஒரு குடும்பம் ஒரு குழந்தை" என்ற கொள்கை தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

தளர்த்தப்பட்ட சட்டம்:
தற்போதுதான் இந்தக் கொள்கையை அரசு சிறிது தளர்த்தி இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் சட்டப்படி அந்தக் கணவர் மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாக முடியாது.

நீ போப்பா.. நீ வாப்பா:
இந்த சிக்கலைத் தீர்க்கும்பொருட்டு அந்தப் பெண் புதிய கணவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய கணவரை மணந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

மகிழ்ச்சியில் பழைய கணவர்:
பழைய கணவருக்கு ஒரு குழந்தை கூட கிடையாது. இதனால் அவர் தான் குழந்தைக்குத் தந்தையாகவிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். பழைய மனைவியை மறுபடியும் மணக்கவும் சம்மதித்தார்.

15 ஆண்களை திருமணம்:
இதுவரை 15 ஆண்களைத் திருமணம் செய்துள்ள இந்தப் பெண் அவர்களில் 9 பேரை மறுமணமும் செய்துகொண்டாராம்.

ஹப்ப்பா.. 26 கல்யாணம்:
இப்படியே இவர் இதுவரை மொத்தமாக 26 கல்யாணம் செய்துள்ளாராம். ஒருவரைத் திருமணம் செய்து குழந்தைகளை படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டுவரவே விழி பிதுங்கும் இந்த காலகட்டத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பலரை மணம் புரிந்த இந்தப் பெண்ணை பற்றி கேட்டாலே இதயம் நின்றுவிடும் போல இருக்கின்றது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications