ஈரான் - அமெரிக்கா மோதல்.. சீனுக்குள் வரும் சீனா! 4 அம்ச திட்டம்.. ஜி ஜின்பிங் போடும் பலே பிளான்?
பீஜிங்: மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் அமைதி திரும்ப 4 அம்ச திட்டங்களை சீனா முன்மொழிந்துள்ளது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் ஹலேத் பின் முகம்மது பின் சையத் அல் நஹ்யானுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா - ஈரான் மோதல் விவகாரத்தில் எந்த பக்கமும் நேரடியாக ஆதரவை தராத சீனா, அமைதி திரும்ப முதல் முறையாக 4 அம்ச திட்டங்களை முன்வைத்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையே அணுசக்தி விவகாரத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி போர் வெடித்தது. இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த போர் நீடித்த நிலையில், பாகிஸ்தான் தலையிட்டட்தால் இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா
இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து நிரந்த போர் நிறுத்தம் ஏற்படுத்த ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான குழு ஈரானிய பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 21 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து, கடும் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட போவதாக அறிவித்தார். அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிறுத்தப்பட்டும் எனவும் ஈரான் துறைமுகங்களில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க வரும் கப்பல்கள் அனுமதிக்கபடாது எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கில் அமெரிக்கா இதனை முன்னெடுத்தாலும் சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
4 அம்ச திட்டத்தை முன் வைக்கும் சீனா
மேலும் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி தனது நாட்டு கப்பல் ஒன்றையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எடுத்து வந்தது. இந்த நெருக்கடிகளுக்கு இடையே அமெரிக்கா - ஈரான் இடையே இரண்டாவது சுற்று வார்த்தை இன்னும் இரண்டு தினங்களில் நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சீனா தன் பங்குக்கு களத்தில் குதித்துள்ளது.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்த சீன அதிபர் ஜி ஜின்பிங் 4 அம்ச திட்டத்தை முன்வைத்தார். அதில், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்திய நாடுகளுக்கு இடையில் அமைதியான உறவு என்ற கொள்கை. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பகுதிக்கான நிலையான பாதுகாப்பு அமைப்பை உருவாக்க நாடுகள் தங்களின் உறவுகளை மேம்படுத்த வேண்டும், நாடுகளின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அதை யாரும் மீறக்கூடாது. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடாவில் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும்.
மறைமுகமாக அமெரிக்காவுக்கு குட்டு
உலகம் மீண்டும் குழப்பநிலைக்கு திரும்பாமல் இருக்க, ஐக்கிய நாடுகள் அமைப்பை மையமாகக் கொண்டு சர்வதேச அமைப்பை உறுதியாக நிலைநிறுத்துவது அவசியம், பாதுகாப்புடன் இணைந்த வளர்ச்சியை அனைத்து நாடுகளும் முயற்சிக்க வேண்டும். பிராந்திய முன்னேற்றத்திற்கு சீனா தனது நவீனமயமாக்கல் முயற்சிகளை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறது என 4 அம்ச திட்டங்களை முன்வைத்து இருக்கிறார்.
வரி விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே மோதல் போக்கு நீடித்து வரக்கூடிய சூழலில், ஈரான் மீதான தாக்குதலை சீனா விமர்சித்தது. எனினும் வெளிப்படையாக ஆதரவு காட்டவில்லை. அதேநேரத்தில் ஈரானுக்கு சீனா ஆயுதங்களை விற்றால் அந்த நாட்டின் மீது 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்து இருந்தது. அடுத்த மாதம் சீனாவுக்கு டிரம்ப் செல்ல உள்ளார். இந்த நிலையில், இதை எல்லான் கருத்தில் கொண்டே சீனா, அமெரிக்காவை மறைமுகமாக குட்டும் வையில் 4 அம்ச திட்டத்தை முன்வைத்து இருப்பதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications