US Tariff: இந்தியாவின் சுதந்திரமான செயல்பாடு டிரம்புக்கு பிடிக்கவில்லை! அமெரிக்காவின் மூக்கை உடைத்த சீன ஊடகம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதற்கு சீனாவின் வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் சீனாவின் ஊடகங்கள் நம் நாட்டுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. அதில், இந்தியாவின் சமநிலையான போக்கு அமெரிக்காவுக்க பிடிக்கவில்லை. அமெரிக்கா சொல்வதை கேட்காமல் இந்தியா சுதந்திரமாக செயல்படுவதால் தான் டிரம்ப் வரிகளை விதித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனால் கோபமான டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதில் 25 சதவீத வரி நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த 25 சதவீத வரி இன்னும் 19 நாட்கள் கழித்து அமலுக்கு வர உள்ளது. டிரம்பின் இந்த வரி விதிப்பு நம் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.

chinese-media-backs-india-in-tariff-clash-with-us-president-donald-trump

அமெரிக்காவின் இந்த வரி விதிப்பை நம் நாடு கடுமையாக கண்டித்துள்ளது. இது நியாயமற்றது. துரதிர்ஷ்டவசமானது. இருப்பினும் தேச நலனை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய வெளியுறவுறத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டுக்கு டிரம்ப் விதித்த வரிக்கு நட்பு நாடான ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆதரவாக வந்த சீனா

அதேபோல் அண்டை நாடான சீனாவும் நம் நாட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. அதேபோல் டிரம்பின் வரி விதிப்பை விமர்சனம் செய்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன்னிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க குவோ ஜியாகுன் கூறுகையில், ‛‛வரிகளை தவறாக பயன்படுத்துவதற்கு சீனா எப்போது எதிர்ப்பு தெரிவிக்கும். இது நிலையான முடிவாகும்'' என்று கூறி அமெரிக்காவை எதிர்த்துள்ளார். இந்நிலையில் தான் இந்நிலையில் தான் இந்தியா மீதான வரி விதிப்புக்கு சீனாவின் ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

சீன ஊடகம் கட்டுரை

அதோடு இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் சீனாவின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான ‛குளோபல் டைம்ஸ்' சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‛‛இந்தியாவின் ஸ்ரேட்டிஜிக் சமநிலை அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான மேலாதிக்கத்தை தாக்குகிறது' என்று அந்த கட்டுரைக்க தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அந்த கட்டுரையில், ‛‛ரஷ்யா எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா தண்டிக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்கா விரும்புவதை செய்யாததால் தான் தண்டிக்கப்படுகிறது. அமெரிக்க நலன்களுக்கு உட்பட்டு செயல்படும் வரை மட்டுமே அமெரிக்கா இந்தியாவை நெருங்கிய கூட்டாளியாக கருதி உள்ளதை தற்போதைய நடவடிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

சுதந்திரமான நிலைப்பாடு

இந்தியா ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும்போது அது அமெரிக்காவின் மதிப்பை குறைக்கிறது. அது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவின் பார்வையில், இந்தியா ஒருபோதும் சமமான கூட்டாளியாக நடத்தப்படாதது தெரிகிறது. தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகவே இந்தியாவை, அமெரிக்கா பார்த்து இருக்கலாம். அதேபோல் அமெரிக்காவிற்கு, இந்தியா ஒருபோதும் சிறப்ப விருந்தினராக இல்லை. மெனுவில் உள்ள வெறும் ஒரு பொருளாக மட்டுமே அமெரிக்கா இந்தியாவை பார்த்து இருக்கலாம்.

இந்தியா புவிசார் அரசியலில் ஒரு சமநிலையை பேண முயற்சி மேற்கொண்டு வருகிறது. பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற குழுக்களின் மூலமாக இந்த பணியை முன்னெடுத்து வருகிறது. இந்த அமைப்புகள் உலகின் பன்முக போக்கை ஆதரித்து வருகின்றன. அதேவேளையில் இந்தியா இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளையும் ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறை இந்தியாவிற்கு தூதரக ரீதியாகவும், பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பு வழங்கி உள்ளது.

அமெரிக்காவின் நிலைப்பாடு

இருப்பினும், உலகின் முன்னணி சக்தியாக நிலைத்திருக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அமெரிக்கா, இந்தியாவுக்கு எதிரியான செயலில் ஈடுபட்டுள்ளது. இந்த வியூகம் தற்போது ஒரு கடினமான யதார்த்தத்தை எதிர்கொள்கிறது. அமெரிக்கா பனிப்போர் கால பாணி குழு மோதல்களை மீண்டும் கொண்டு வருகிறது.

மேலும் இந்தியர்கள் இப்போது அமெரிக்கா உடனான தங்களின் உறவு என்பது ஒருதலைப்பட்சமாக இருந்துள்ளதே என்று நினைக்கலாம். உலகப் பொருளாதாரத்தின் மீது அமெரிக்காவின் கட்டுப்பாடு மற்றும் இந்தியாவின் சொந்த முடிவுகளை எடுக்கும் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையேயான வெளிப்படையான மோதலை கருத்தில் கொண்டு "அடுத்து என்ன? என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும்.

பரஸ்பர விவாதம்

திறந்த, பரஸ்பர விவாதத்துக்கு பதிலாக அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் மூலமாக சக்தி வாய்ந்த நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கு எந்த வழியும் வகுக்காது. இதனை இந்தியா உணர தொடங்கி உள்ளது. இந்தியா தனது சொந்த பாதையில் உறுதியாக நின்று பரஸ்பர மரியாதை, அனைவருக்கும் உதவும் ஒத்துழைப்பு அடிப்படையில் அதிகாரத்தை சமமாக பயன்படுத்தும் வகையில் ஒரு உலகை ஆதரிப்பதில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் டிரம்பால் இந்தியா - சீனா உறவு மேம்பட தொடங்கி உள்ளது.

வலுவாகும் இந்தியா - சீனா உறவு

ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் சீனாவுக்கு சென்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். மோடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவில் உள்ள தியான்ஜின் செல்கிறார். அங்கு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். அதாவது கடந்த 2019 ஆம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. தற்போது விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வரும் நிலையில், பிரதமர் மோடி சீனா செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா - சீனா இடையேயான உறவு கடந்த 6 ஆண்டுகளாக மோசமான நிலையில் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு நடுவே மோடி சீனா செல்கிறார். இப்படியான சூழலில் சீன ஊடகங்கள் நமக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் கட்டுரைகளை வெளியிட தொடங்கி உள்ளன. இது அமெரிக்காவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் பெரும் மாற்றம்

ஏனென்றால் சீனா - இந்தியா உறவு வலுப்படும்போது அது சர்வதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இருநாடுகளுடன் ரஷ்யா நட்பில் உள்ளது. அதேபோல் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் பகை உள்ளது. இப்படி 3 வலிமையான நாடுகளும் ஒன்றாகும் போது உலகின் பிற நாடுகள் அமெரிக்காவை கைவிட்டு இந்த கூட்டணியின் பின்னால் வரலாம்.

ஏற்கனவே அமெரிக்கா இல்லாத பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அமெரிக்காவின் டாலரை மதிப்பிழப்பு செய்யும் வகையில் பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வரும் திட்டம் இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பின் கையில் உள்ளது. தற்போதைய டிரம்பின் வரி விதிப்பு அதனை திறம்பட முன்னெடுக்கலாம். இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+