ரூ. 20 கோடிக்கு ஏலம் போன தி்ப்பு சுல்தானின் வீர வாள்!
லண்டன்: திப்பு சுல்தான் பயன்படுத்திய வாளானது கிட்டதட்ட 20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
மைசூர் புலி திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்களை லண்டன் போன்ஹாம்ஸ் என்ற தனியார் ஏல நிறுவனம் நேற்று முன்தினம் ஏலம் விட்டது. இதில் 6 மில்லியன் பவுண்டுகளுக்கும் மேலாக 30 ஆயுதங்களும் ஏலம் போனது.

திப்பு சுல்தான் தனது ஆட்சியில் பயன்படுத்திய அனைத்து ஆயுதங்களிலும் புலி சின்னத்தை பொறித்து வைத்திருந்தார். அவர் பயன்படுத்திய விலை உயர்ந்த மணிகள் பதித்த புலித்தலையோடு கூடிய வாள் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
முன்னதாக இந்த வாள் 37 லட்ச ரூபாய் முதல் 56 லட்ச ரூபாய் வரை விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக அதிக தொகைக்கு இந்த வாள் ஏலம் விடப்பட்டுள்ளது.
அவரது படைப்பிரிவால் பயன்படுத்தப்பட்ட மூன்று பவுண்டு எடையுள்ள குண்டுகளை வீசும் பீரங்கி 13 கோடிக்கு ஏலம் போனது. இது தவிர அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய துப்பாக்கி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
மேலும், ஆயுதக்குவியலில், வளைவான கத்திகள், மணிகள் பதித்த வாள், அம்புகள், வேலைப்பாடுடன் கூடிய தலைக்கவசங்கள், பிஸ்டல்கள் ஆகியவையும் ஏலத்தில் விடப்பட்டன.
மிகுந்த கலைநயத்துடன் இவை அனைத்தும், நேர்த்தியான முறையில் செய்யப்பட்டிருந்ததாக ஏல நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications