இத்தாலியில் ஒரே நாளில் 50 பேர் பலி.. .ஈரானில் ஒரே நாளில் 49 பேர் பலி.. மிரட்டும் கொரோனா
தெஹ்ரான்: சீனாவைத் தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது, இன்று ஒரே நாளில் 49 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி விட்டது . குறிப்பாக கோவிட்-19 வைரஸ் எனப்படும் கொரோனா வைரஸ் ஈரான், தென்கொரியா, இத்தாலி ஆகிய அதிவேகமாகப் பரவி பலரை காவு வாங்கி வருகிறது.

இதேபோல் தைவான், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கனடா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,042 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது.
இத்தாலியில் இன்று ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்து உள்ளது. ஒட்டுமொத்தமாக அங்கு 5583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 1000த்தை தாண்டி உள்ளது. அந்த அளவுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதற்கிடையே ஈரானிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளனர. இதுவரை ஒட்டுமொத்தமாக 195 பேர் ஈரானில் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் சுமார் 743பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்நாட்டு அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் ஒட்டுமொத்தமாக 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி உலக அளவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 19 பேர் உயிரிழந்தனர். உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3500ஐ தாண்டி உள்ளது.
இந்நிலையில் ஈரானில் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க ஏப்ரல் மாதம் முடிய அனைத்து பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதுபோலவே சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications