கடந்த 24 மணி நேரத்தில் உலகில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட மரணங்கள்.. பாதிப்புகள்... களநிலவரம்
ஜெனிவா: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 142,649 ஆக அதிகரித்துள்ளது என்றும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 5393 பேர் இறந்துள்ளார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
Recommended Video
உலகம் முழுவதும் சுகாதார அவசர நிலையை உருவாக்கி உள்ள கொள்ளை நோயான கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான் உலகிற்கு பரவி உள்ளது.
ஆனால் சீனாவில் நேற்றைய நிலவரப்படி புதிதாக 20 பேருக்குத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,844 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவா அங்கு சுமார் 3500 பேர் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது புதிதாக 10 பேர் இறந்துள்ளனர். சீனா கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டது.

உலக நாடுகள் தவிப்பு
ஆனால் அதேநேரம் இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின், வடகொரியா, கனடா, இந்தியா, வங்கதேசம், சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா என உலகின் பல நாடுகளும் கொரோனா என்ற கொள்ளை நோய்க்கு எதிராக போராடி வருகின்றன. கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன.

உலகில் 5393 பேர் மரணம்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,649 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,393 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உலகின் பல்வேறு இடங்களில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மொத்த மக்களில், 697 பேர் டயமண்ட் இளவரசி கப்பலைச் சேர்ந்தவர்கள், 14 பேர் சீனாவிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். ஜப்பானில் கொரோனாவல் இறந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. அதில் 7 பேர் கப்பலில் இறந்தவர்கள் ஆவர்.

76 பேருக்கு புதிதாக பாதிப்பு
தென் கொரியாவில் புதிதாக 76 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு ஒரே நாளில் 3பேர் கொரோனாவால் இறந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி தென்கொரியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 8,162 ஆக உயர்ந்துள்ளது. கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, நேற்று 3 பேர் இறந்தனர், இறப்பு எண்ணிக்கை தென்கொரியாவில் நாடு தழுவிய அளவில் 75 ஆக உயர்ந்துள்ளது.

டிரம்புக்கு சோதனை
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அயர்லாந்தையும் அமெரிக்கா வருவதற்கும் தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் டிரம்ப் சேர்த்துள்ளார். 29 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு 30 நாட்களுக்கு தடைவிதித்து அண்மையில் டிரம்ப் தடைவிதித்தார் .

மக்களுக்கு கட்டுப்பாடு
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், அதை எதிர்த்து போராடுவதற்காக ஸ்பெயின் அரசு, இரண்டு வார காலத்திற்கு நாட்டில் தேசிய அவசர நிலையை பிறப்பித்துள்ளது. அதன்படி உணவகங்கள் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடைகள் தவிர அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறவும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இநதியாவில் 93 ஆக உயர்வு
பிரான்ஸ் நாட்டில் உணவகங்கள், கஃபேக்கள், திரைப்பட அரங்குகள், பிற அத்தியாவசிய கடைகளை மூட வேண்டும் என்று பிரதமர் எட்வார்ட் பிலிப் உத்தரவிட்டுள்ளார், இந்த உத்தரவின்படி உணவகங்கள், கஃபேக்கள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகள் ஆகியவற்றை மூட உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் மளிகைக் கடைகள், மருந்தகங்கள் மற்றும் எரிவாயு நிலையங்கள் பொதுமக்களுக்கு திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, பிரான்சில் குறைந்தது 3,667 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications