உள்ளே வர கூடாது.. 3500 பேருடன் நடுக்கடலில் நிறுத்தப்பட்ட கப்பல்.. கொரோனாவால் ஜப்பானில் பகீர்!

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திடீர் வேகமெடுத்தது கொரோனா... பலி எண்ணிக்கையும் உயர்ந்தது | Coronavirus beats Sars in China

    டோக்கியோ: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் மீன் மார்க்கெட் ஒன்றில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுக்க மொத்தம் 23 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது.

    கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மட்டும்இதனால் 65 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வைரஸ் எப்படி

    வைரஸ் எப்படி

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் கப்பல் ஒன்று நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கார்னிவல் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஆகும் இது. டயமண்ட் பிரின்சஸ் என்பது இந்த கப்பலின் பெயர், இந்த கப்பல் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்துள்ளது. இந்த கப்பலில் 3500 பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    வைரஸ் தாக்குதல்

    வைரஸ் தாக்குதல்

    சீனாவிற்கு அருகே, சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரத்துடன் ஹாங்காங் இருக்கிறது. அங்கும் தற்போது 8 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் வந்த அந்த கப்பலில் இருந்த ஒருவருக்கும் வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 80 வயது முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மறுப்பு

    மறுப்பு

    இதனால் அந்த கப்பலை நாட்டிற்கு உள்ளே அனுமதிக்காமல் துறை முகத்தில் இருந்து 5 கிமீ தூரத்திலேயே ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. அவர்களை இப்போது உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று ஜப்பான் அரசு கூறியுள்ளது. இந்த நோய் தொடுல் மூலம் பரவக்கூடியது ஆகும். அதேபோல் நோய் தாக்குதல் உள்ளவர்கள் தொட்ட பொருளை தொட்டாலும் இந்த வைரஸ் பரவும். கப்பலில் இருக்கும் 80 வயது முதியவரால் மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவி இருக்கலாம்.

    கப்பல் ஜப்பான்

    கப்பல் ஜப்பான்

    இதனால்தான் அந்த கப்பலை உள்ளே அனுமதிக்க ஜப்பான் அரசு மறுத்துள்ளது. 3500 பேர் உள்ள இந்த கப்பலில் 2500 பேர் பயணிகள். 1000 பேர் ஊழியர்கள். இவர்கள் எல்லோரையும் ஜப்பானின் மருத்துவர்கள் சோதித்து வருகிறார்கள். வேறு ஒரு கப்பலில், நடு கடலுக்கு சென்று, அங்கிருந்து, அந்த சர்ச்சைக்குரிய கப்பலுக்கு உள்ளே சென்று சோதனை நடக்கிறது. முழுதாக சோதனை முடிந்த பின்தான் இதில் முடிவு எடுக்கப்படும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+