டெல்லியில் அடுத்த நபருக்கும் கொரோனா.. எண்ணிக்கை 31 ஆக உயர்வு.. எப்படி வந்தது? பரபர பின்னணி!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
பெய்ஜிங்: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
ஹரியானாவில், உத்தரகாண்டிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முதல் நாள் டெல்லியில் பேடிஎம் ஊழியர் ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

நேற்று எப்படி
டெல்லியில் காசியாபாத் பகுதியில் இன்னொரு நபருக்கும் வைரஸ் தாக்கியது நேற்று உறுதி செய்யப்பட்டது. இத்தாலியில் இருந்து டெல்லிக்கு வந்த சுற்றுலா பயணிகள் 16 பேரால்தான் இந்த வைரஸ் வேகமாக இந்தியாவில் பரவியது குறிப்பிடத்தக்கது. இவர்களை தனியாக வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இது இல்லாமல் இத்தாலி சென்று திரும்பிய டெல்லி நபர் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் உள்ளது.

என்ன சந்தேகம்
இதில் சிலர் நோய் பாதிப்பு ஏற்பட்ட நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். அதன் மூலம் வைரஸ் தாக்கியுள்ளது. இன்னும் சிலர் நோய் தாக்கியவர்களுடன் தொடர்பு கொண்டு உள்ளனர். அதன் மூலம் அவர்களுக்கு வைரஸ் தாக்கியுள்ளது. இன்னும் சிலருக்கு எப்படி வைரஸ் தாக்கியது என்பது கண்டுபிடிக்க முடியவில்லை. காண்டாக்ட் டிரேஸ் முறை மூலம் இவர்கள் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

எப்படி பரவியது
இவர்கள் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதன் மூலம், அவர்களுக்கும் வைரஸ் தாக்குதல் உள்ளதா என்று கண்டுபிடிக்க முடியும். இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இவர் கடந்த சில வாரங்கள் முன் தாய்லாந்து மற்றும் மலேசியா சென்று திரும்பி உள்ளார்.

தீவிர சோதனை
இதன் மூலம் அவருக்கு வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்கிறார்கள். இவரை மருத்துவர்கள் சோதனை செய்து வருகிறார்கள். இவர் தொடர்பு கொண்ட நபர்களுக்கும் வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதனால் அவர்களும் தீவிரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய் தாக்குதல் போகும் வரை மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications