கொரோனா வாக்சின்.. மனிதர்களிடம் சோதனையை முடிச்சுட்டோம்.. சொல்கிறது ரஷ்யா!

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யாவை சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று முழுமையாக செய்து முடித்துள்ளது .

Recommended Video

    Russia finishes Clinical Trial for Corona Vaccine

    உலகம் முழுக்க கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்தியாவிலும் கூட கோவாசின் உள்ளிட்ட இரண்டு மருந்துகள் இதற்கான ரேஸில் இருக்கிறது.

    உலகம் முழுக்க இருக்கும் 120 முன்னணி நிறுவனங்கள் இப்படி தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக மிக தீவிரமாக முயன்று வருகிறது. அதிலும் ஆக்ஸ்போர்ட் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் ChAdOx1 nCoV-19 தடுப்பூசி மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு உள்ளது.

    கடக்கும் போட்டி

    கடக்கும் போட்டி

    எந்த நாடு முதலில் இந்த மருந்தை உருவாக்கும் என்று கேள்வி உள்ளது. தற்போது மனித சோதனைகள் இது தொடர்பாக நடந்து வருகிறது. மனிதர்கள் மீது கொரோனா மருந்தை சோதனை செய்துவிட்டு, அதன் முடிவிற்காக குறைந்தது 10 மாதமாவது காத்து இருக்க வேண்டும். இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்து முடித்து உள்ளது. உலகிலேயே முதல்முறையாக இந்த தடுப்பு மருந்து சோதனையை மனிதர்கள் மீது ரஷ்யா முழுமையாக செய்துள்ளது.

    யார்?

    யார்?

    ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி இந்த சாதனையை செய்துள்ளது. மனிதர்கள் மீது இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம். இதுவரை வெளியான முடிவுகள் சிறப்பாக இருக்கிறது. இந்த சோதனையில் ஈடுபட்ட நபர்கள் வரும் புதன் கிழமையும் அதன்பின் ஜூலை 20ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள்.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த மனித சோதனையில் கலந்து கொண்ட நபர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்கள். கடந்த ஜூன் 18ம் தேதி மனிதர்கள் மீதான சோதனையை தொடங்கினோம். தற்போது இதில் சோதனை முடிந்துள்ளது. உலகிலேயே மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனையை செய்து முடித்த முதல் நபர்கள் நாங்கள்தான் என்று அந்த ரஷ்ய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .

    பாதுகாப்பானது

    பாதுகாப்பானது

    நாங்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது மார்க்கெட்டில் இருந்து மருந்துகள் போலவே இதுவும் பாதுகாப்பான மருந்து என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இந்த மருந்தில் மேலும் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்து வருகிறோம்.

    இன்னொரு பக்கம் உற்பத்தி

    இன்னொரு பக்கம் உற்பத்தி

    இதற்கான உற்பத்தியை அதிகரிக்க இன்னொரு பக்கம் முயன்று வருகிறோம். கடந்த மூன்று மாதமாக இந்த மருந்து தயாரிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வந்தோம். அனைத்து விதிகளையும் பின்பற்றி இந்த சோதனையை செய்து முடித்து இருக்கிறோம் என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மருந்தின் பெயர் என்ன, இது எப்போது மார்கெட்டிற்கு வரும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    மனிதர்கள் மீது சோதனை

    மனிதர்கள் மீது சோதனை

    தற்போது உலகம் முழுக்க 21 கொரோனா தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செய்த மருந்து சோதனை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிலும் கோவாசின் உள்ளிட்ட இரண்டு மருந்துகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் ரஷ்யா முதல் தடுப்பு மருந்து சோதனையை செய்து முடித்துவிட்டதாக கூறுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+