உள்ளே விடமாட்டோம்.. கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம்.. சீனா சொல்லும் காரணம்!
கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா மிகவும் கண்டிப்புடன் குறிப்பிட்டு உள்ளது.
பெய்ஜிங்: கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா மிகவும் கண்டிப்புடன் குறிப்பிட்டு உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது, எங்கே முதலில் தோன்றியது என்பது குறித்த சந்தேகங்கள் இப்போதும் நிலவி வருகிறது. இந்த வைரஸ் சீனாவில்தான் தோன்றியது என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. அங்கு இருக்கும் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா நம்புகிறது.
அதாவது வைரலாஜி சோதனை மையத்தில் உள்ள பி4 சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்க வாய்ப்புள்ளது. இதை பற்றி விரைவில் விசாரிப்போம் என்று அமெரிக்கா தெரிவிக்க தொடங்கி உள்ளது.

கடும் விமர்சனம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக தொடர்ந்து கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார். சீனா கொரோனாவின் தோற்றம் குறித்து வேண்டும் என்றே மறைத்து இருந்தால் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இது தொடர்பான உண்மைகளை விரைவில் வெளியே கொண்டு வருவோம் என்று டிரம்ப் கோபமாக பேசி வருகிறார். ஐரோப்பிய நாடுகளும் சீனா மீது கோபத்தில் உள்ளது.

என்ன திட்டமும்
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள்தான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. சீனா மீது இதனால் கடுமையான நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகிறது. இதற்காக சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து ஐரோப்பா யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனா மறைத்தது
கொரோனா குறித்த அடிப்படை தகவல்களை சீனா மறைத்து உள்ளதாக தெரிகிறது. கொரோனாவின் தோற்றம் குறித்தும், அதன் தொடக்க கால பரவல் குறித்தும் விசாரிக்க வேண்டும். இதில் சீனா சில உண்மைகளை மறைத்து உள்ளது. ரஷ்யாவும் இதில் சில முக்கியமான உண்மைகளை மறைத்து உள்ளது. சீனா தேவையில்லாமல் இதில் அமெரிக்கா மீதெல்லாம் பழியை போட்டது தவறு.

முக்கிய கோரிக்கை
அதேபோல் கொரோனாவிற்கு எதிரான ஐரோப்பா யூனியனின் பணிகளை இவர்கள் விமர்சனம் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சீன ஊடங்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது. இதனால் சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து விசாரணை செய்ய வேண்டும். சர்வதேச அதிகாரிகள் சீனாவிற்குள் சென்று இதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐரோப்பா யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா கோபம்
அதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான் இது தொடர்பான சீனாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அடுத்த மாதம் உலக சுகாதார கூட்டம் நடக்க உள்ளது. உலக சுகாதார மையத்தின் திட்டங்களை இந்த கூட்டத்தில்தான் வகுப்பார்கள். இதில் சீனாவிற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சீனா மறுப்பு
ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் ரீதியான நடவடிக்கை. நாம் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறோம்.

அரசியல் காரணம்
இப்போது அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கைகளை செய்ய கூடாது. இல்லையென்றால் கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்தில் கவனம் சிதறிவிடும். இது தொடர்பாக ஏன் தேவையில்லாமல் விசாரணை செய்ய வேண்டும். அதற்கான அவசியம் எதுவும் இல்லை. மக்களை பொய்களை சொல்லி தவறாக வழி நடத்துவது மிகவும் ஆபத்தானது. கொரோனா வைரஸை விட அரசியல் வைரஸ் ஆபத்தானது என்று சீனா தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications