ஹார்வே புயலால் கெமிக்கல் தொழிற்சாலை வெடிக்கும் அபாயம்.. அமெரிக்காவில் பீதி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை மூழ்கடித்து கடும் சேதம் ஏற்படுத்தியுள்ளது ஹார்வே புயல். உச்சக்கட்டமாக புயலில் வேதிப்பொருள் தொழிற்சாலை ஒன்று சிக்கி, வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் வ
நியூயார்க்: அமெரிக்காவை ஹார்வே புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலின் கோர கரங்களில் சிக்கிய கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று வெடிக்கும் அபாயத்தில் உள்ளதால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 'ஹார்வே' புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. நாட்டின் நான்காவது பெரிய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ள ஹூஸ்டன் நகரம், வெள்ளத்தில் மிதக்கிறது. ஹூஸ்டன் நகரத்தில் புயல், வெள்ளத்தில் சிக்கி , இதுவரை 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹூஸ்டனின் அருகே உள்ள க்ராஸ்பை என்ற இடத்தில் பிரமாண்டமான அளவில், வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சாதன அறைகளில் வெள்ளநீர் புகுந்துவிட்டதால் வேதிப்பொருட்களை குளிர்நிலையில் வைத்திருக்கும் எந்திரங்கள் வேலை செய்யவில்லை.
இதனால், எப்போது வேண்டுமானாலும் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் என்ற நிலை உள்ளது. இதனையடுத்து, அந்நகரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளநீரை வெளியேற்றி விட்டு மாற்று ஏற்பாடுகள் மூலம் மின்சாதனங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஹூஸ்டன் நகர அரசு அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications