நாடு எதிர் நோக்கியுள்ள சவால்களில் வெற்றி காண வேண்டும்... மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து
தர்மசாலா: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக அமரப் போகும் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய்லாமா.
16வது லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மோடியும் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி விரைவில் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், திபெத்திய புத்த மதத்தலைவரான தலாய்லாமாவும் மோடிக்கு கடிதம் வாயிலாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடுகளில் உதாரணமாக திகழ்வது இந்தியா. உலகில் உள்ள பல மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வசித்து வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் தங்கள் தலைமையில் நல்ல வளர்ச்சியும், வளமையும் பெற்று திகழ்கிறது. அதேபோல் இந்தியா திகழ வாழ்த்துகிறேன். பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க உள்ள தாங்கள், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களையும், மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்றுவதில் வெற்றி காண வேண்டும்'.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications