100 நாடுகளுக்கு மேல் பரவியது.. சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வேரியண்ட்.. ஹூ
ஜெனீவா: கொரோனா வைரஸ்களைவிட இந்த டெல்டா வகை வேரியண்ட்கள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அடுத்து கொரோனாவின் 3ஆவது அலை தீவிரமாகும் என தெரிகிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை வைரஸ்கள் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குநரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் டெல்டா வகை கொரோனா 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
அதன் பரவல் மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வகையாக மாறக் கூடும். அனைத்து வகையான கொரோனா வைரஸ்களை விட இந்த டெல்டா வகையானது மிக விரைவாக பரவி வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் 75 லட்சம் மாடர்னா வகை கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்த வைரஸானது பிரிட்டன், அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.
டெல்டா வேரியண்ட் இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த டெல்டா வேரியண்ட்தான் இந்தியாவில் கொரோனா 2ஆவது வகைக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications