நபிகள் நாயகத்தை தரக்குறைவாக பேசிய இந்து டெய்லரை கழுத்தை அறுத்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
டாக்கா: வங்கதேசத்தில் நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக பேசிய இந்து மதத்தை சேர்ந்த டெய்லர் ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
வங்கதேசத்தில் உள்ள டங்கைல் மாவட்டத்தில் இருக்கும் துபைல் கிராமத்தை சேர்ந்தவர் நிகில் சந்திரா ஜோர்டர்(50). டெய்லர். அவர் தனது வீட்டிலேயே ஒரு பகுதியை கடையாக வைத்து துணி தைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை பைக்குகளில் வந்த மூன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அவரை வீடு புகுந்து கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். அவர்கள் ஒரு பையை நிகில் வீட்டில் விட்டுச் சென்றனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி முகமது அப்துல் ஜலீல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மூன்று பேர் நிகிலின் வீடு புகுந்து அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர். அவர்கள் விட்டுச் சென்ற பையில் 3 முதல் 4 வெடிகுண்டு போன்ற பொருட்கள் இருந்தது. நிகில் கடந்த 2012ம் ஆண்டு நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவாக பேசியதாக உள்ளூர் மூஸ்லீம்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்களின் புகாரின்பேரில் அவர் மீது வழக்கப்பதிவு செய்யப்பட்டது. அதன் காரணமாகத் தான் தீவிரவாதிகள் அவரை கொலை செய்திருக்கிறார்கள் என்றார்.
முன்னதாக தலைநகர் டாக்காவில் கடந்த வாரம் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக பேசி வந்த இரண்டு பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வெட்டிக் கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications