மெஷின் கன்னை கன்னத்தில் சொருகி... மிரள வைக்கும் புக்கெட் திருவிழா!
புக்கெட்: தாய்லாந்தில் நடைபெற்றுவரும் புகெட் சைவத் திருவிழா காண்போரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
ஒவொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
இந்தத் திருவிழாவின் போது தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக, அதி பயங்கரமான கத்திகள், இரும்பு கம்பிகள், சைக்கிள் மற்றும் மெஷின் கன் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் தங்கள் கன்னத்தை துளையிட்டு சொருகி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இது காண்பதற்கு படு பயங்கரமாக இருந்தாலும் இதனை பக்தர்கள் வேண்டி விரும்பி செய்கின்றனர்.

சீனர்களின் திருவிழா
தாய்லாந்தில் உள்ள புக்கெட் எனும் இடத்தில், சீனாவிலிருந்து குடிபெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தத் திருவிழா தவோயிஸ்ட் எனும் கடவுளை சிறப்பிப்பதற்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொத்துக் கொத்தாக இறந்த மக்கள்
1825-ஆம் ஆண்டு பிளேக் நோயால் மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர். அப்போது அவர்களை குணப்படுத்த சீனாவில் இருந்து வந்த இந்தக் கடவுளின் சீடர்கள் நோயால் பாதிக்கப்பட்ட மக்களை சைவ உணவை மட்டுமே உண்ணுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன் மூலம் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குனமடைந்ததாகக் கூறப்படுகிறது.

அம்மன் கோவில் விழா போல
இதனை நினைவு கூறும் வகையில் இந்த புக்கெட் திருவிழா தாய்லாந்து நாட்டில் ஒவோறு வருடமும் நடத்தப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் நம்மூர் அம்மன் கோவிலில் மேகொள்ளப்படும் தீ மிதிக்கும் வேண்டுதலை தாய்லாந்து நாட்டிலும் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இத்திருவிழாவைக் கான ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிகின்றனர்.

அலகு குத்துவது போல
நம்மூர் முருகன் கோவிலுக்கு அலகுக் குத்தி செய்யப்படும் நேர்த்திக் கடனை இவர்கள் சங்கர் பட பாணியில் கொஞ்சம் பிரம்மாண்டமாக செய்து காண்போரை வெகுவாகக் கவர்கின்றனர் என்பதுதான் விசேஷமானது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications