‘எக்ஸ்’ குறித்து கேள்வி... ‘முட்டாள்’ எனத் திட்டி, செய்தியாளருக்குப் பளார் விட்ட மரடோனா!
பியோனஸ் ஏர்ஸ்: அர்ஜெண்டினா செய்தியாளரைக் கன்னத்தில் அறைந்து பிரச்சினையில் சிக்கியுள்ளார் பிரபல கால்பந்து வீரர் டிகோ மரடோனா.
உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் டிகோ மரடோனா. இவர் தனது குழந்தை டிகோ பெர்ணாண்டோ மற்றும் காதலியுடன் தலைநகர் பியோனஸ் ஏர்ஸில் உள்ள தியேட்டர் ஒன்றில் படம் பார்க்க வந்திருந்தார்.
அப்போது மரடோனாவைப் பார்த்த செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். மரடோனாவும் தனது காரை நிறுத்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

மகிழ்ச்சி...
எனது மகனுடன் முழு நாட்களையும் கழிக்கிறேன். இது என் மகனுக்கான பரிசு என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மரடோனா.

கேள்வி...
அப்போது ஒரு செய்தியாளர் மரடோனாவிடன் சைகை மூலமாக இக்குழந்தையின் தாய் பற்றிக் கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது.

பதில்...
இதனால், ஆத்திரமடைந்த மரடோனா, ‘என்ன இது முட்டாள் தனம்! ஏன் எனது மனைவி குழப்பம் அடைய வேண்டும். நான் ஏன் என் மனைவியை குழப்பம் அடைய செய்யவேண்டும். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு 53 வயது ஆகிறது' எனப் பதிலளித்தார்.

பளார்...
ஆனபோதும், தனது முன்னாள் மனைவி குறித்து கேட்கப்பட்ட கேள்வியால் கோபமடைந்த மரடோனா, காரை விட்டு வெளியே வந்து ‘முட்டாள்' எனத் திட்டியபடியே செய்தியாளர் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.

மரடோனாவின் காதலிகள்...
கடந்த ஒரு மாத்திற்கு முன் 25 வயது பிரபல இளம் பெண் பத்திரிகையாளர் எமி அமோடோ மரடோனாவின் காதலி என ஊடகங்களில் செய்தி வெளியானது. அதேபோல், சமீபத்தில் மரடோனாவின் முன்னாள் காதலி ஒலிவியா (24 ), துபாயில் அவரது மாளிகையில் இருந்த பொருடகளை திருடிவிட்டதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications