முடிவுக்கு வராத பஞ்சாயத்து.. அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு நோ சொன்ன ஈரான்!
இஸ்லாமாபாத்: அமெரிக்கா-ஈரான் இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஈரான் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு வந்திருக்கிறார்கள். விரைவில் அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவும் பாகிஸ்தான் வர இருக்கிறது. இருப்பினும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு விருப்பமில்லை என ஈரான் அறிவித்திருக்கிறது.
ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், அமெரிக்க அதிகாரிகளுடன் எந்தவிதமான நேரடிச் சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரான் சொன்ன விஷயம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தற்போது இஸ்லாமாபாத்தில் தங்கியிருந்தாலும், ஈரானின் கருத்துக்கள் பாகிஸ்தான் மூலமாகவே அமெரிக்காவிற்குத் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அப்பாஸ் அராக்சி கூறுகையில், "அமெரிக்காவால் திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்தவும் பாகிஸ்தான் எடுக்கும் சமாதான முயற்சிகளுக்கு ஈரான் ஒத்துழைப்பு அளிக்கிறது. எங்கள் அண்டை நாடுகளே எங்கள் முன்னுரிமை" என்று தெரிவித்திருக்கிறார். இது அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசுவதை விட பிராந்திய உறவுகளுக்கே ஈரான் முக்கியத்துவம் அளிப்பதைக் காட்டுகிறது.
பாகிஸ்தான் போகும் அதிகாரிகள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பியுள்ளார். பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டால், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் நேரடியாகப் பாகிஸ்தான் செல்லவும் வாய்ப்புள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தை எப்படி போகுது?
அதேபோல, ஈரான் தரப்பில் இருந்து சில சலுகைகள் வருவதாகவும், தற்போது ஈரானில் யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மறுபுறம் ஈரான் ஊடகமான தஸ்னிம், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் முற்றிலுமாக நிராகரித்துவிட்டதாகக் கூறுகிறது. அமெரிக்காவின் அகங்காரப் போக்கு மற்றும் அத்துமீறல்கள் காரணமாக தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்பதே ஈரானின் நிலைப்பாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொத்தடிமை முறையை ஒழிக்க இந்தியா தவறிவிட்டதாம்.. கூடுதல் வரிக்கு காரணம் சொல்லும் டிரம்ப்! -
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications