For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: அல்குவைதா தலைவர் உத்தரவு!

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம் பிரிவினர் மீதோ முஸ்லிம் அல்லாதோர் மீதோ இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அல்குவைதா இயக்கத்தினருக்கு அதன் தலைவர் அல் ஜவாஹிரி உத்தரவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அல்குவைதா இயக்கத்தினருக்கு அவர் பிறப்பித்திருக்கும் ஆடியோ உத்தரவில், நமது ஜிஹாத் போராட்டம் நெடியது. ஜிஹாத்தில் ஈடுபடுவோருக்கு புகலிடம் மிகவும் அவசியமாகும். ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, யேமன் மற்றும் சோமாலியாவில் மோதல்கள் தவிர்க்க முடியாதவை.

முஸ்லிம் நாடுகளில் இதர முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். அல் குவைதாவின் யுக்திப்படி சிறிய தாக்குதல்களை நடத்த வேண்டும். அமெரிக்காவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்த வேண்டும். எகிப்தில் அதிபர் மோர்சிக்கு எதிரான போராட்டம் பாராட்டுக்குரியது. ஆனால் துனிசியா கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல என்று கூறியுள்ளார்.

English summary
Al-Qaida leader Ayman al-Zawahri has issued his first specific guidelines for jihad, urging restraint in attacking other Muslim sects and non-Muslims and in starting conflicts in countries where jihadis might find a safe base to promote their ideas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X