Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென குலுங்கிய கட்டிடங்கள்.. ஜப்பானில் 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பதறியோடிய மக்கள்

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஹொக்கைடோ தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி நாடு ஜப்பான். தீவு நாடான ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் ஜப்பான் இடம் பெற்றுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான்.

 ஜப்பான்

ஜப்பான்

சிறு சிறு நில அதிர்வுகள் தொடங்கி மிக பெரிய நிலநடுக்கம் கூட அங்கு ஏற்படும். இதனால் அங்கு பள்ளிகளிலேயே கூட நிலநடுக்கம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி போலச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். அந்தளவுக்கு அங்கு நிலநடுக்க பாதிப்பு இருக்கிறது. அங்குக் கட்டப்படும் கட்டிடங்களும் கூட நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையிலேயே கட்டப்பட்டிருக்கும்.

 நிலநடுக்கம்

நிலநடுக்கம்

இதற்கிடையே ஜப்பானில் இப்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு ஜப்பான் பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 6.18 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வடகிழக்கு ஜப்பான் முழுவதும் நன்கு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குப் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின.

 6.1 ரிக்டர்

6.1 ரிக்டர்

ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள அமோரியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

 சுனாமி எச்சரிக்கை இல்லை

சுனாமி எச்சரிக்கை இல்லை

மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியின் மீது அமைந்துள்ளதே இப்படி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகும். "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதிகளில் நிலத்திற்கு அடியே டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதும். அதுவே நிலநடுக்கத்திற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. நல்வாய்ப்பாக இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதங்கள் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+