பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. 5 பேர் உயிரிழப்பு, கட்டிடங்களை விட்டு மக்கள் அலறி அடித்து ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

மணிலா: பிலிப்பைன்சில் இன்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 5பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்கா புவியியல் ஆய்வு அதிகாரிகள் 6.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அறிவித்துள்ளனர்.

Earthquake of 6.3 magnitude strikes in Philippines, killing 5

இந்த நிலநடுக்கத்தால், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உயர்ந்த கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்து அலறி அடித்தபடி சாலைகளுக்கு ஓடிவந்து குவிந்தனர். லூசன் கடற்கரை பகுதியை ஒட்டிய ஏராளமான நகரங்கள் நிலநடுக்கம் காரணமாக இருளில் மூழ்கி கிடக்கின்றன. பம்பங்கா என்ற பகுதியில் நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Earthquake of 6.3 magnitude strikes in Philippines, killing 5

ஏராளமான மக்கள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் கட்டிடங்களுக்குள் செல்லாமல் சாலையிலே குவிந்து இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதுவும் விடப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+