பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்".. சிலி நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
சிலி: இன்று சிலி நாட்டில் உள்ள அன்டோபகாஸ்டாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சிலி நாட்டின் கடலோர நகரமான அன்டோஃபாகஸ்டாவில் இருந்து கிழக்கே 265 கிலோமீட்டர் தொலைவில் 128 கிலோமீட்டர் ஆழத்தில் நடந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கிடுகிடுவென ஆடின. சில நிமிடங்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பாதிப்புகள் குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

ஏஎப்பி செய்தியின்படி, இதுவரை நிலநடுக்கம் ஏற்பட்ட சிலி நாட்டின் அன்டோஃபாகஸ்டா பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம், வடக்கு சிலியின் தாராபாகாவில் 118 கிமீ ஆழத்தில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது எந்த பாதிப்பும் சிலி நாட்டில் ஏற்படவில்லை. சிறிய அளவில் மட்டுமே வீடுகள், கட்டிடங்கள் குழுங்கின.

பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று. அந்த வகையில்,. உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் சிலியும் ஒன்றாக இருக்கிறது. சிலி நாடு பசிபிக் பெருங்கடலின் "ரிங் ஆஃப் ஃபயர்" இல் அமர்ந்திருக்கிறது. இந்த இடம் பூமியின் பல எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் கொந்தளிப்பான பகுதியாகும். தூங்கும் எரிமலைகள் அவ்வப்போது வேலையை காட்டுவதால் நிலநடுக்கம் ஏற்படுவதுடன் சுனாமியும் ஏற்படுகிறது.
1960ம் ஆண்டு சிலி நாட்டின் தெற்கு நகரமான வால்டிவியாவில் 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதான், உலகில் பதிவுசெய்யப்பட்ட மிக பயங்கரமான நிலநடுக்கங்களில் ஒன்று என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2010ம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications