துருக்கி நிலநடுக்கம்.. நேரடியாக களமிறங்கிய இந்திய டீம்.. 10 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

ஆப்ரேஷன் தோஸ்த் மூலம் சுமார் 6 விமானங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் மருந்து பொருட்கள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

அங்காரா: துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களில் சிக்கி 15 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதில் 10 இந்தியர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், ஒருவர் காணவில்லையென்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் லேசான நில அடுக்குகள் கொண்ட இடங்களில் துருக்கியும் ஒன்று. இப்படியான இடங்களில் அடிக்கடி நில நிலநடுக்கம் ஏற்படும். கடந்த 1939ம் ஆண்டு உருவான நிலநடுக்கம் காரணமாக சுமார் 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடந்த 3ம் தேதி பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் சுமார் 7.8 ஆக பதிவான நிலையில், ஆயிரக்கணக்கில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இதனையடுத்து மீட்டுப்புப்பணிகள் தொடங்கின. பல நாடுகளும் தங்கள் படைகளை அனுப்பி வைத்தன. தொடக்கத்தில் 100 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மோசமான வானிலை காரணமாக துருக்கியின் தெற்கு பகுதியிலிருந்து இஸ்தான்புல் மற்றும் தலைநகர் அங்காராவுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டிருந்தது. எனவே மீட்பு படைகளை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைப்பது சவாலாக இருந்தது. இதனையடுத்து வானிலை சீரான உடன் மீட்பு படைகள் சம்பவ இடத்திற்கு சென்று சேர்ந்தன. ஆனால் அடுத்த 12 மணி நேரத்திற்குள் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்ரேஷன் தோஸ்த்

ஆப்ரேஷன் தோஸ்த்

இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களும் இடிபாடுகளில் சிக்கினர். பின்னர் ஒரளவு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமடைந்தன. இதில் ஏராளமான உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உடல் என 4000 உடல்கள் இடிபாடுகளிலிருந்து சடலமாக மீட்கப்பட்டன. அதேபோல உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளின் பேரிடர் மீட்புப்படையினர் துருக்கி வீரர்களுடன் சேர்ந்து ஏராளமான மக்களை உயிருடன் மீட்டனர். குறிப்பாக இந்தியா சார்பில், 'Operation Dost' செயல்படுத்தப்பட்டது. இந்த ஆப்ரேஷன் மூலம் சுமார் 6 விமானங்களில் இந்திய பேரிடர் மீட்புப்படையினர் துருக்கி சென்றுள்ளனர்.

40 லட்சம் பேர் பாதிப்பு

40 லட்சம் பேர் பாதிப்பு

வீரர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் மீட்பு பணிக்கு உதவியாக நாய்கள், தொழில்நுட்ப கருவிகள் மருந்துகள் மற்றும் 30 படுக்கைகள் கொண்ட மொபைல் மருத்துவமனையும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். துருக்கியை போலவே சிரியாவுக்கும் ஈசிஜி என்ஜின், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றை இந்தியா C-130J விமானத்தில் அனுப்பி வைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 40 லட்சம் பேர் குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்து வருவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மீட்புப் பணி

மீட்புப் பணி

இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் வசித்து வந்த இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை (மேற்கு) செயலாளர், சஞ்சய் வர்மா கூருகையில், "ஆபரேஷன் தோஸ்த் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தற்போது வரை சுமார் 10 இந்தியர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ஒருவர் காணவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், "கடந்த 2 நாட்களாக அவர்களை தேடி வருகிறோம். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. காணாமல் போனவருடைய நிறுவனத்துடனும், அவரின் குடும்பத்தினருடனும் தொடர்பு கொண்டு வருகிறோம்" என்றும் கூறியுள்ளார்.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

நிலநடுக்கம் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாததால் தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இரவில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே செல்வதால் மீட்பு பணிகளை முழுவீச்சில் கொண்டு செல்ல முடியவில்லை என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கூறியுள்ளனர். துருக்கியிலும், சிரியாவிலும் உள்ள மீட்பு படை வீரர்கள் சுமார் 15 நாட்கள் வரை அந்த நாடுகளில் மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என NDRF டைரக்டர் ஜெனரல் அதுல் கர்வால் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+