அந்தமானில் கடத்தப்பட்ட 8 ஜரவா இனப் பெண்கள் மீட்பு - கடத்தல்காரர்கள் கைது

இவர்கள் எட்டு பேரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டு ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்திருப்பதாக அந்தமான் எஸ். பி சின்மய் பிஸ்வால் கூறியுள்ளார்.
அருகி வரும் இனக் குழுதான் இந்த ஜரவா என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரன் திக்ரி என்ற இடத்தில் இவர்களை அடைத்து வைத்திருந்த தகவல் கிடைத்ததும் ஜரவா இனத்தவரின் நலக்குழு ஒன்றும், போலீஸ் படையும் விரைந்து சென்று அவர்களை மீட்டன.
முதலில் நான்கு பெண்களையும், அவர்களுடன் தங்கியிருந்த 4 ஆண்களையும் போலீஸ் குழு மீட்டது. பின்னர் இன்னொரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்கள் மீது ஜரவா இன மக்கள் கடும் கோபமடைந்து தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போலீஸார் தலையிட்டு அவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்களை ஜரவா இனத்தவரோடு, படகு ஒன்றில் போலீஸார் ஜாகோனா என்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல், அந்தமான் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி- எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்குப் போட்டுள்ளனர்.
ஜரவா இனமானது அழியும் நிலையில் உள்ள ஒரு ஆதி அந்தமான் இனமாகும். இந்த இனத்தில் தற்போது மொத்தமே 417 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications