''கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சுக்கிட்டு இருக்க'' குடும்பத்துடன் படுத்து தூங்கிய யானைகள்.. என்ன அழகு
பீஜிங்: யானை, ரயில், கடல். இந்த மூன்றும் நாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. கடலை ரசித்தபடி கடலை போடுவதே(நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இது வேர்க்கடலைங்க) தனி சுகம்தான்.
Recommended Video
என்னதான் பலமுறை ரயிலில் பயணம் செய்திருந்தாலும், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் ரயிலின் அழகை பேருந்து, வாகனங்களின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ரசிக்காத தலைகளே இருக்காது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதுதான் யானைகள். கிராமமோ, நகரமோ தெருவில் யானைகள் அழைத்து செல்லப்பட்டால், சின்ன, சின்ன குட்டீஸ்கள் மட்டுமின்றி பெரியவர்களும் வீட்டின் வாசலில் அட்டடன்ஸ் போட தவற மாட்டார்கள்.

யானைகளின் சேட்டை
இப்படிப்பட்ட யானைகள் கடந்த சில நாட்களாக தங்களது சேட்டைகள் மூலம் உலக மக்களை குஷியில் ஆழ்த்தி வருகிறது. யானைகள் சேட்டைகளை அரங்கேற்றி வரும் இடம் எது தெரியுமா? கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக மக்களின் வெறுப்புகளை சம்பாதித்து வரும் சாட்சாத் சீனாதான். யானைகள் அப்படி என்னதான்யா பண்ணிச்சுனு கேட்குறீங்களா? வாங்க சீனாவுக்கு போவோம்.

15 மாத பயணம்
சீனாவின் யுனான் மாகாண வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன, இங்கு இருந்த 16 ஆசிய யானைகள் திடீரென தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறின. சுமார் 15 மாதங்களுக்கு முன்பாகவே யுனானில் இருந்து குன்மிங் வனப்பகுதியை நோக்கி இதுக பயணத்தை தொடங்கி விட்டன. இதுவரை சுமார் 500 கி.மீ தூரத்தை கடந்து வந்து வந்து விட்டன.

மனிதர்களை தாக்கவில்லை
தாய், தந்தை, குழந்தைகள் என குடும்பமாக பயணிக்கும் இந்த யானைகள் மனிதர்கள் வசிக்கும் இடங்களை கடந்து சொல்லும்போது, வீட்டின் கேட்டுகளை தட்டி பார்ப்பது, கடைகளில் இருக்கும் உணவுகளை, வயல்வெளியில் இருக்கும் தானியங்களை ருசி பார்பபது என பல்வேறு சேட்டைகளை செய்து வருகிறது. ஆனால் இது வரையிலும் மனிதர்களை தாக்குவது, வீடுகளை தாக்குவது என கொடூரமாக நடந்து கொண்டதில்லை.

தூக்கம் சூப்பர் தூக்கம்
இந்த நிலையில்தான் சியாங் டவுன்ஷிப்பில் அருகே வனப்பகுதியில் சென்றபோது '' அம்மா, அம்மா.. கால் வலிக்குதும்மா'' என்று குட்டி யானைகள் கெஞ்ச , 'ஆமா.. எவ்வளவு நேரம்தான் நடக்குறது. மூச்சு வாங்குது. டயர்டா இருக்கு'' என்று அம்மா யானை சொல்ல, மொத்த குடும்பமும் அங்கேயே படுத்து உறங்கியது. இந்த தூக்கம்தான் இப்போது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அதுவும் அம்மா மீது குட்டி யானை படுத்து உறங்கும் காட்சி மீண்டும் மீண்டும் பார்க்க துண்டுகிறது,

இலக்கை அடைய வாழ்த்துக்கள்
தொடர்ந்து இந்த யானை குடும்பம் பயணத்தை தொடர்ந்து வருகிறது. வனத்துறையினர் ட்ரோன் மூலம் அதனை கண்காணித்து வருகின்றனர். யானைகள் ஊருக்கு வந்தாலும் அதனை துன்புறுத்த கூடாது என்று மக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர். யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் எதற்காக தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறியது என்பது தெரியவில்லை. இந்த குடும்பம் சீக்கிரம் தங்களது இலக்கை அடைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications