பப்புவா சிறையிலிருந்து தப்பிய 11 கைதிகள் சுட்டுக் கொலை
லே, பப்புவா நியூ கினி: பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள சிறையிலிருந்து தப்பி ஓடிய 11 கைதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
பப்புவா நியூ கினி நாட்டின் 2வது பெரிய நகரம் லே. இங்குள்ள பியூமோ சிறையில் ஏகப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து 90க்கும் மேற்பட்ட கைதிகள் திடீரென தாக்குதல் நடத்தித் தப்பினர்.

சிறைக் காவலர்களைத் தாக்கித் தப்பியோடிய அவர்களைச் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலீஸார் வேட்டையில் குதித்தனர். இதில் தப்பி ஓடிய கைதிகளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் 2வது முறையாக இங்கு சிறை உடைப்பு நடந்துள்ளது. கடந்த ஆண்டு இதேபோல நடந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடினர்.
இதுகுறித்து போலீஸ் கண்காணிப்பாளர் அந்தோணி வகம்பி கூறுகையில், 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வறுமையிலும் ஏழ்மையிலும் வாடி வரும் நாடு பப்புவா நியூ கினி. இங்கு சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை. இதனால் இந்த நாட்டில் எந்த வளர்ச்சித் திட்டமும் நடைபெற முடியாத நிலை நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications