ஆமா, அதென்ன கடலுக்குள்ளே வெள்ளையா.. துண்டாக போய் விழுந்த "தலை".. விஞ்ஞானிகளே ஆடிப்போயிட்டாங்க.. ஐயோ
கடந்த ஆண்டு இதே மெக்சிகன் கடலில் ஸ்கூபா டைவர் ஒருவர் வெள்ளை சுறா தாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
மெக்சிகோ: மெக்சிகோவில் ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை வெள்ளை சுறாமீன் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் மீனவர் உயிரிழந்துள்ளார். பொதுவாக சுறாக்கள் மனிதர்களை தாக்காது என்றும், இந்த தாக்குதல் சம்பவம் அரிதாக நிகழ்ந்தது எனவும் ஆய்வாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மெக்சிகோவின் கலிபோர்னியா வளைகுடாவில் உள்ள டோபரி விரிகுடாவில் உள்ளூர் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மானுவல் லோபஸ் எனும் மீனவர் ஒருவர் ஆழ்கடல் நீச்சலுக்கு பயன்படுத்தும் உடைகளை கொண்டு கடலுக்கு அடியில் இருந்த நத்தைகளை சேகரித்துக்கொண்டிருந்துள்ளார். ஒருவர் மட்டுமே கடலுக்கு அடியில் இருந்த நிலையில் மற்ற இருவரும் படகிலேயே இருந்துள்ளனர். நத்தைகளை சேகரித்து முடித்த மானுவல் மேற்பரப்புக்கு வந்திருக்கிறார்.
அங்கு வெள்ளை நிறத்தில் சுறா மீன் ஒன்று நீந்திக்கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இவரை சுறா தாக்க இவர் நிலைக்குலைந்துள்ளார். இதில் இவரின் தலை துண்டாக்கப்பட்டுள்ளது. தோள் பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக சுறா மீன்கள் மனிதர்களை தாக்காது. ஏனெில் மனிதர்கள் தங்களுடைய இரை இல்லையென்று சுறாக்களுக்கு தெரியும். இருப்பினும் சில நேரங்களில் அரிதாக தாக்குதல்கள் நடக்கின்றன.

தாக்குதல்
நீந்தும் போது மனிதனின் கால்கள் அசைவதை பார்க்கும் சுறா மீன்கள் தங்களுடைய இரை என எண்ணி தாக்குகின்றன. இப்படி தாக்கும்போது மனிதர்களின் கால்களில் காயம் ஏற்படும். ஆனால் கடித்த பின்னர் சுறாவுக்கு இது தன்னுடைய இரை இல்லையென்று தெரிந்துவிடும். ஆகவே மனிதர்களை மேற்கொண்டு தாக்காமல் விட்டு விட்டு சென்றுவிடும். இந்த விஷயத்தை அறிந்த ஸ்கூபா டைவர் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சுறா மீன்களை பெரியதாக கண்டுக்கொள்வதில்லை. மானுவலும் அதேபோலதான் இருந்திருக்கிறார். ஆனால் இந்த எதிர்பாராத தாக்குதலில் அவருடைய தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்ளூர் மீனவர்கள் கூறுகையில், "எங்களுக்கு கடலுக்கு போனாதான் வருமானம். இதையெல்லாம் பார்த்து பயந்துகிட்டு இருந்தா வாழ்க்கையை நடத்த முடியாது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வாளர்கள் விளக்கம்
இந்த சம்பவம் மெக்சிகோ மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தலைப்பு செய்தியாக்கப்பட்ட நிலையில் ஆய்வாளர்கள் இது குறித்து விளக்கமளித்துள்ளனர். 'லைவ் சயின்ஸ்' எனும் இதழில் ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது, "இது போன்ற தாக்குதலை நான் கேள்விப்பட்டதே கிடையாது" என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் கடல் உயிரியலாளர் கிரெக் ஸ்கோமல் கூறியுள்ளார். மேலும், "சுறா அரிதாகவே மனிதர்களை கடிக்கின்றன. அவ்வாறு கடித்தாலும் இது தன்னுடைய இரை இல்லையென்று விட்டுவிடும். மிகுந்த உற்சாகத்துடனும், பசியுடனும் இருக்கும் நேரத்தில்தான் இந்த மாதிரியான தாக்குதல்கள் நடக்கும்.

காரணம்
ஆனால் மானுவலுக்கு நடந்துள்ள சம்பவம் அரிதினும் அரிதானதாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். வெள்ளை சுறாக்கள் 680-1,100 கி.கி வரை எடை இருக்கும். இவற்றின் விருப்பமான உணவு காதுகள் இல்லாத ஒரு வகை சீல்கள்தான். 12 முதல் 21 அடி நீளம் வரை வளரும் இந்த சுறாக்களுக்கு சுமார் 3 ஆயிரம் பற்கள் இருக்கும். இந்த பற்களில் ஏதேனும் ஒரு இரை மாட்டிக்கொண்டால் அது தப்பிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. திடீரென தாக்கும் மூர்க்க குணம் இதன் தனித்துவமாகும். என்னதான் ஸ்கூபா டைவர்கள் சுறாக்களுக்கு பயப்படாமல் இருந்தாலும், இந்த வெள்ளை சுறாக்களை கண்டால் சற்று பீதியடையத்தான் செய்வார்கள்.

கடந்த ஆண்டும்
கடந்த ஆண்டு இதே மெக்சிகன் கடலில் ஸ்கூபா டைவர் ஒருவர் வெள்ளை சுறா தாக்கப்பட்டதால் உயிரிழந்தார். இச்சுறாக்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா தொடங்கி அடலாண்டிக் பெருங்கடல்கள் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்காள விரிகுடா, டாஸ்மான் கடல், பசிபிக் பெருங்கடல்கள் என உலகின் எல்லா இடத்திலும் வசிக்கின்றன. இதுவரை இந்த சுறாக்கள் 52 பேரை கொன்றுள்ளதாக சொல்லப்படுகிறது.











Click it and Unblock the Notifications