ஜெர்மனி பேஸ்புக் ஆபிஸ் மீது மர்ம கும்பல் தாக்குதல்... சுவரில் டிஸ்லைக் வாசகம் பதிவு!
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பேஸ்புக் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், அங்குள்ள சுவரில் 'டிஸ்லைக்' எனப் பதிவு செய்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பேஸ்புக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அங்கு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலுவலகத்தின் ஜன்னல்களை சூறையாடிய அக்கும்பல், பேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும், சுவற்றில் 'பேஸ்புக் டிஸ்லைக்' என எழுதியும் சென்றுள்ளதாக புலனாய்வு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பேஸ்புக் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக்கின் ஐரோப்பிய பிரிவு தலைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்ற குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப்பின் பேச்சைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், "மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக பேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, பேஸ்புக்கில் இனவெறி துவேஷப் பேச்சுக்களை நீக்காத தவறுக்காக வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பேஸ்புக் நிறுவன நிர்வாக இயக்குநர் மார்ட்டின் ஓட் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications