ஆய்வு என்ற போர்வையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம்... ஜப்பானில் ஒரு ‘டாக்டர் பிரகாஷ்’!
டோக்கியோ : மருத்துவ ஆய்வு என்ற போர்வையில் சுமார் 100க்கும் அதிகமான பெண்களை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து விற்பனை செய்த நபரை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜப்பானைச் சேர்ந்தவர் 54 வயது ஹிடயுக்தி நொகுச்சி. உறங்கும் போது பெண்களின் இரத்த அழுத்தம் எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்ட நொகுச்சி, இதற்கென பல பெண்களை ஹோட்டல் மற்றும் கடற்கரை விடுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, ஆய்வு செய்வதாகக் கூறி அப்பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார் நொகுச்சி. மேலும் அந்த அந்தரங்க காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து ஆபாச இணைய தளங்களுக்கு விற்று அதன் மூலமாக 85000 டாலருக்கும் (52 லட்சம் ரூபாய்) மேல் சம்பாதித்திருக்கிறார்.
நொகுச்சி குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மீதான குற்றங்கள் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து நொகுச்சியைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை மட்டும் நொகுச்சியால் பாதிக்கப்பட்ட 14 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட 39 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவரால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 100க்கும் மேல் இருக்கும் என்றும் ஜப்பான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர் முறையாக டாக்டருக்குப் படித்தவரா என்று தெரியவில்லை. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது அட்டூழியத்திற்கு டோக்கியோ, ஒசாகா, சிபா, டோசிகி, சிஷுவோகா ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள நொகுச்சிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications