ஃபெட்னா 2017: 'கிறுக்கல்கள்' தந்த பார்த்திபன் தமிழ்ப்பேரவை விழாவில் தருகிறார் கவிதை மழை

இயக்குனர், நடிகர், கவிஞர் என்று பன்முகங்களைக் கொண்ட பார்த்திபன், தமிழ் நெஞ்சங்களைக் கவர்ந்திழுத்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக கலக்கி வருபவர். அவர் ஃபெட்னா 2017 வில் பங்கேற்று உலகத் தமிழர்களுக்கு உ

Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30-ஆம் ஆண்டு தமிழ் விழா நிகழ்ச்சி மினியாபொலிஸ் நகரில் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. அதில் கலந்துகொண்டு தமிழர்கள் மத்தியில் உற்சாக மழை பொழியவிருக்கிறார் நடிகர் பார்த்திபன்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் சிறந்த படைப்பாளியாவார். திரைத்துறையில் நடிப்பு, நெறியாள்கை, திரைக்கதை, இயக்கம், பாடலாசிரியர் முதலானவற்றிலும் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருப்பவர். 75இக்கும் மேலான படங்களில் தோன்றியவர்.

 FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Actor Parthiban is going to participate

புதியபாதை, பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, பாரதி கண்ணம்மா, காக்கைச்சிறகினிலே, அழகி, குடைக்குள் மழை போன்ற படங்கள் திரைப்பட ஆர்வலர்களிடையே வெகுவாக பேசப்பட்ட படங்கள் ஆகும். சிறந்த பேச்சாளரான இவர், மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதிலும் புகழ் பெற்றவராவார். ஏராளமான குறுங்கவிதைகளையும் எழுதி வாசிப்பவர்களுக்கு மனமலர்ச்சியை விதைத்தவர்.

விதை முளைக்க
நீர், நிலம்,ஒளி
எல்லாம் வேண்டும்!!

கவிதை முளைக்க
நீ போதும் எனக்கு...!!!

விலக
விலக
புள்ளிதானே..
நீ
எப்படி
விசுவரூபம்?

இது போன்ற காதற்திணையில் எழுதி கவிதைகள் இளைஞர்களிடத்திலே வரவேற்பைப் பெற்றன.

பன்முகத்திறன் கொண்ட இயக்குநர் இரா.பார்த்திபன்,இலக்கியம், கலை, படைப்பு முதலானது குறித்துத் தன் அனுபவங்களை அமெரிக்கத் தமிழர்களிடம் பேசிப் பகிர்ந்து கொள்ள, அமெரிக்கத் தமிழ்த்திருவிழா ஒரு வாய்ப்பாக அமையவிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+