துடித்த ஃபிபா வீரர்.. ஒரே ஒரு பிளேயருக்காக.. பிரைவேட் ஜெட்டை அனுப்பிய சவுதி சல்மான்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டோஹா: கோல் கீப்பர் தலையில் கை வைத்து உட்கார்ந்து இருக்க.. சக வீரர்கள் என்ன நடந்தது என்று பதற்றத்தில் விழிக்க.. எதிரணி வீரர்களோ.. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று காட்ட.. என சினிமாவிற்கு நிகரான காட்சிகள் நேற்று நடந்த அர்ஜென்டினா - சவுதி ஆட்டத்தில் நடந்தன. சவுதி முடி இளவரசர் சல்மானே நேரடியாக தலையிடும் அளவிற்கு நிலைமை அவ்வளவு மோசமாக மாறி உள்ளது. அப்படி என்னதான் நடந்தது?

கத்தாரில் 2024 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. எல்லா வருடமும் ஏதாவது ஒரு டாப் அணி அதிர்ச்சி அளிக்கும் விதமாக தோல்வியை தழுவும்.

இந்த வருடம் தோல்வியை தழுவியது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி முதல் பாதியில் கோல் போட்டும் கூட இரண்டாம் பாதியில் சவுதி அணி இரண்டு கோல் போட்டு வென்றுள்ளது.

அர்ஜென்டினா மேட்ச்

அர்ஜென்டினா மேட்ச்

முதல் பாதியில் உலகக் கோப்பையில் முன்னிலை பெற்று இரண்டாம் பாதியில் அர்ஜென்டினா தோல்வி அடைவது மிக மிக அரிதானது. அரிதானது என்றால் கடந்த 40 வருடங்களாக இப்படி அர்ஜென்டினா அணி உலகக் கோப்பையில் இரண்டாம் பாதிக்கு சென்று தோல்வி அடைந்ததே இல்லை. ஆனால் எல்லாத்துக்கும் ஒரு முடிவு வேணும்ல குமாரு என்று சொல்வதை போல அர்ஜென்டினாவிற்கு ஒரு முடிவு கட்டி இருக்கிறது சவுதி. இந்த போட்டியில் நேற்று சவுதி வீரர்கள் உயிரை கொடுத்து ஆடினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 4 வீரர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையிலும், தொடர்ந்து மைதானத்தில் நின்று இரண்டாம் பாதி ஆட்டத்தில் மாஸ் காட்டினார்கள்.

சவுதி வீரர்

சவுதி வீரர்

பொதுவாக உயிரை கொடுத்து ஆடுவார்கள் என்பதை பேச்சுக்குத்தான் சொல்வார்கள். ஆனால் சவுதி தடுப்பு ஆட்டக்காரர் யாசர் அல் சஹ்ரானி இதை நிஜத்திலேயே நிகழ்த்தி காட்டி இருக்கிறார். நேற்று ஆட்டத்தின் போது இவரும் சவுதி கீப்பர் அலோவாய்ஸும் மோதிக்கொண்ட போதுதான் அந்த விபத்து ஏற்பட்டது. கோல் போஸ்டை நோக்கி சென்ற பந்தை டிபன்ட் செய்வதற்காக யாசர் அல் சஹ்ரானி வேகமாக அருகில் ஓடினார். அப்போது சவுதி கீப்பரும் பந்தை பிடிக்க அருகில் வந்தார்.

சவுதி வீரர் காயம்

சவுதி வீரர் காயம்

அவர்களை சுற்றி இரண்டு அர்ஜென்டினா வீரர்களும் இருந்தனர். இந்த நிலையில்தான் சவுதி கீப்பர் பந்தை அடிக்கிறேன் என்று ஜம்ப் செய்து முட்டியால் பந்தை அடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் யாசர் அல் சஹ்ரானி பந்தை அடித்து பறக்கவிட்டார். அப்படியே ஜம்ப் செய்து வந்த கோல் கீப்பர் கட்டுப்படுத்த முடியாமல் தனது முட்டியால் யாசர் அல் சஹ்ரானி முகத்தில் மோதினார். கால் முட்டி வேகமாக அவர் முகத்தில் குத்தியது. இந்த சம்பவம் நடந்ததும் யாசர் அல் சஹ்ரானி அப்படியே தரையில் விழுந்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

எதுவும் பேசாமல் யாசர் அல் சஹ்ரானி அப்படியே படுத்துக்கிடந்தார். அவரால் எதுவும் பேச முடியாத நிலைஏற்பட்டது. கண்கள் அசையாமல், மூர்ச்சசையான நபரை போல அங்கேயே படுத்துக்கிடந்தார். அவரை சுற்றி சுற்றி வீரர்கள் குவிந்தனர். கீப்பர் மட்டும் தான் செய்தது தவறு. எதோ தவறு நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவர்தான் முட்டியில் மோதினார் என்பதால் எந்த வேகத்தில் மோதினோம் என்பது அவருக்கு தெரியும். இதனால் அவர் கீழே அமர்ந்து, முட்டி போட்டபடி பார்த்துக்கொண்டு இருந்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதையடுத்து உடனே ஸ்ட்ரெச்சர் கொண்டு வந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே சோதனை செய்யப்பட்ட இவருக்கு முகத்தில் இரண்டு எலும்புகள் உடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் தாடையும் உடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை உடனடியாக ஜெர்மனி அல்லது வேறு வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதற்காக விமானம் தயார் செய்யப்பட்டது.

சல்மான்

சல்மான்

எதுவும் பேசாமல் யாசர் அல் சஹ்ரானி அப்படியே படுத்துக்கிடந்தார். அவரால் எதுவும் பேச முடியாத நிலை ஏற்பட்டது. கண்கள் அசையாமல், மூர்ச்சசையான நபரை போல அங்கேயே படுத்துக்கிடந்தார். அவரை சுற்றி சுற்றி வீரர்கள் குவிந்தனர். கீப்பர் மட்டும் தான் செய்தது தவறு. ஏதோ தவறு நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவர்தான் முட்டியில் மோதினார் என்பதால் எந்த வேகத்தில் மோதினோம் என்பது அவருக்கு தெரியும். இதனால் அவர் கீழே அமர்ந்து, முட்டி போட்டபடி பார்த்துக்கொண்டு இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+