திருட்டு ‘தம்’... தந்தைக்குப் பயந்து 13வது மாடியில் இருந்து குதித்த 13 வயது சிறுவன் பலி
சார்ஜா: சார்ஜாவில் திருட்டுத்தனமாக புகை பிடித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக 13வது மாடியில் இருந்து குதித்ததில் தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாகப் பலியாகியுள்ளான்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் பணி நிமித்தமாக அரபு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது 13 வயது மகன் ஒருவன் தனது தீய நண்பர்களின் சகவாசத்தால் சிறுவயதிலேயே புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளான்.
மகனது புகைப் பிடிக்கும் பழக்கம் தந்தையின் கவனத்துக்கு வரவே அவர் அவனை அழைத்து எச்சரித்துள்ளார். மேலும், இனியொருமுறை அவன் புகைப் பிடிப்பதை தான் கண்டாலோ அல்லது கேள்வி பட்டாலோ அவ்வளவு தான்...' என எச்சரித்தும் அனுப்பியுள்ளார்.
ஆனால், அச்சிறுவனால் புகைப் பிடிக்கும் பழக்கத்திலிஎஉந்து மீள முடியவில்லை. தொடர்ந்து தந்தைக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக புகைப் பிடித்து வந்துள்ளான். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல திருட்டுத்தனமாக 13வது மாடி பால்கனியில் நின்று புகைப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறான் அச்சிறுவன்.
அப்போது எதிர்பாராத விதமாக பணிக்கு சென்றிருந்த அவனது தந்தை விரைவாக வீடு திரும்பியிருக்கிறார். மாடிப்படிகளில் ஏறி வரும் போதே மகன் புகைப் பிடித்துக் கொண்டிருப்பதை தந்தை பார்த்திருக்கிறார். தந்தை பார்த்து விட்டதை மகனும் கவனித்து விட, தந்தை மேலே வந்ததும் தனக்கு தண்டனை நிச்சயம் என உணர்ந்த அச்சிறுவன், பயத்ஹ்தில் மாடியில் இருந்து குதித்துள்ளான்.
இதில், தலையில் பலத்த காயமடைந்த அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானான். இறந்த சிறுவனின் உடல் சார்ஜா போலீஸ் தடயவியல் ஆய்வகத்தில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications