துபாய்: உலகின் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து!
ஷார்ஜா: துபாயில் உலகின் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து சம்பவத்தில் சேதம் குறித்தான உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
துபாயின் மேரினோ மாவட்டத்தில் உள்ள 79 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 50 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. 50 ஆவது மாடியில் தீ பிடித்து எரிந்ததில் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் பிற மாடிகளின் மீது விழுந்தது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்துவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி இறுதியில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தான தகவல் எதுவும் வெளியாவில்லை. தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் வெளியாவில்லை. தீ விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications