ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் புதிய வரலாறு! ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பற்றிய முதல் தமிழ் நூல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா: ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகத் திருவிழாவில், அந்நாட்டின் ஆட்சியாளர் குறித்த முதல் தமிழ் நூல் மிகச் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அரங்கு எண் 7-ல் உள்ள எழுத்தாளர் பேரவை அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகம் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

எழுத்தாளரும் மூத்த ஊடகவியலாளருமான முதுவை ஹிதாயத் எழுதிய 'ஷார்ஜாவின் சிற்பி - மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூல்தான் இதில் வெளியிடப்பட்டது. ஷார்ஜா ஆட்சியாளரின் வாழ்க்கை மற்றும் சாதனைகளைத் தமிழில் விவரிக்கும் முதல் புத்தகம் இதுவாகும்.

Sharjah International Book Fair

இறை வணக்கத்தோடு தொடங்கிய இந்த விழாவில், இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஹ்ரூப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து கல்லிடை முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நூலின் சிறப்புகள் குறித்து விரிவான அறிமுக உரையாற்றினார்.

எஸ்.என்.ஜி (S.N.G) குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான செய்யது எம். ஸலாஹுதீன் இந்த நூலை முறைப்படி வெளியிட, அதன் முதல் பிரதியைத் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான நவாஸ்கனி எம்.பி. அன்போடு பெற்றுக் கொண்டார்.

Sharjah International Book Fair

தொடர்ந்து முஸ்லீம் லீக் மாநிலச் செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், தமிழக காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். ஹிதாயத்துல்லா, தமிழக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா மொய்னுதீன் ஹஜ்ரத், தொழிலதிபர்கள் கீழக்கரை ஏ.ஜே. கமால், நூருல் ஹக், ஆரிப் ரஹ்மான், ஆபித் ஜுனைத், பைரோஸ், நாகூர் ஷேக் தாவூது, டாக்டர் அன்சாரி, டாக்டர் ஜாஹிர் ஹுசைன், டாக்டர் அபுல் கலாம் ஆசாத், இளையான்குடி அபுதாஹிர் மற்றும் கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனரான ஜாஸ்மின் அபூபக்கர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் நூலின் அடுத்தடுத்த பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்.

Sharjah International Book Fair

துபாய் கர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் சித்திரை பொன்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். நூலாசிரியர் முதுவை ஹிதாயத் நன்றியுரையாற்ற, அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் ஏ. முஹம்மது தாஹா ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். அமீரக வாழ் தமிழ் மக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+