Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளாஷ்பேக்: 2014ம் ஆண்டில் உலகை விட்டுப் பிரிந்து போன பிரபலங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்து போக இருக்கின்ற 2014 ஆம் ஆண்டினைப் பின் தள்ளி உலக மக்களை கிட்டதட்ட நெருங்கி வந்தே விட்டது புத்தாண்டு. கடக்கும் 2014 ஆம் ஆண்டில் நாம் பல்வேறு பிரபலங்களை வழியனுப்பி வைத்திருக்கின்றோம் 2014 ஆம் ஆண்டின் கூடவே.

ஏரியல் ஷாரோன் - ஜனவரி 13:

ஏரியல் ஷாரோன் - ஜனவரி 13:

இஸ்ரேல் பிரதமரும், இராணுவத் தளபதியுமான ஏரியல் ஷரோன் ஜனவரி 13, 2014 அன்று உலகைவிட்டு மறைந்தார். 2006 ஆம் ஆண்டில் இருந்து வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கோமாவின் பிடியில் சிக்கினார். 85 வயதான ஷாரோன் மிகவும் பிரபலமான ஒருவர். 3 யுத்தங்களில் பங்கேற்றுள்ள ஷாரோன், 2001 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்து பிரதமரானவர்.

சுசித்ரா சென் - ஜனவரி 17:

சுசித்ரா சென் - ஜனவரி 17:

பாலிவுட் மண்ணில் முன்னாள் தேவதையாக வலம் வந்தவர் சுசித்ரா சென். அவர் கொல்கத்தா மருத்துவமனையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி அன்று தன்னுடைய மூச்சினை நிறுத்திக் கொண்டார். 82 வயதான சுசித்ரா, மாரடைப்பினால் காலமானார். 50 களில் இருந்து 70கள் வரை பல்வேறு படங்களில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியவர் சுசித்ரா.

யுலிசெஸ் எஸ்டெரடா – ஜனவரி 26:

யுலிசெஸ் எஸ்டெரடா – ஜனவரி 26:

கியூபாவினைச் சேர்ந்த புரட்சியாளரான யுலிசெஸ் ஜனவரி 26 ஆம் தேதியன்று காலமானார். 79 வயதான இவர் கியூபா அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வகித்தவர். 1960களில் கொரில்லா தாக்குதல் போன்றவற்றை அமெரிக்கா மீது நடத்தியவர்.

இயக்குனர் பாலுமகேந்திரா – பிப்ரவரி 14:

இயக்குனர் பாலுமகேந்திரா – பிப்ரவரி 14:

தமிழ் கூறும் நல்லுலகில், 2014 ஆம் வருடத்தின் முதல் பாதியிலேயே நம்மை விட்டுச் சென்றவர் இயக்குனர் பாலுமகேந்திரா. சிறந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான இவர் பிப்ரவரி 14 அன்று காலமானார். சென்னையில் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட பாலுமகேந்திரா, மிகவும் மோசமான நிலைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் காலமானார். தமிழில் முள்ளும் மலரும்(ஒளிப்பதிவு), அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை போன்ற அழியாத காவியங்களைத் தந்தவர் பாலுமகேந்திரா.

காபிரியல் கார்சியா மார்குயிஸ் – ஏப்ரல் 17:

காபிரியல் கார்சியா மார்குயிஸ் – ஏப்ரல் 17:

உலகில் மிகவும் ரசிக்கப்பட்ட படைப்புகளின் சொந்தக்காரரான எழுத்தாளர் இவர். தன்னுடைய 87 ஆவது வயதில் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதியன்று இம்மண்ணை விட்டு மறைந்தார். இரைப்பை மற்றும் சிறுநீரக பகுதிகளில் ஏற்பட்ட தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், காபோ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். ஸ்பானிஷ் மொழி எழுத்தாளரான இவர் 100 இயர்ஸ் ஆப் சாலிடியூட், லவ் இன் த டைம் ஆப் குளோரா போன்ற காலத்தால் அழியாத புதினங்களைப் படைத்துள்ளார்.

மைக்கி ரூனே – ஏப்ரல் 8:

மைக்கி ரூனே – ஏப்ரல் 8:

ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான மைக்கி ரூனே, ஏப்ரல் 8 ஆம் தேதியன்று தன்னுடைய 93 வயதில் காலமானார். குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப்பயணத்தினைத் தொடங்கிய மைக்கி, 80 வருடங்கள் திரையில் ஜொலித்துள்ளார்.

அஞ்சா நிய்ட்ரிங்ஹாவ்ஸ் – ஏப்ரல் 4:

அஞ்சா நிய்ட்ரிங்ஹாவ்ஸ் – ஏப்ரல் 4:

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த கொடுமையான போரினால் தன்னுடைய இன்னுயிரை இழந்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த, புலிட்சர் விருது பெற்ற பிரபல புகைப்படக்கலைஞர் அஞ்சா. அவரும், அவருடைய சக பணியாளரும் ஆப்கானிய தாக்குதலின் போது, ஆப்கன் போலீஸ் ஒருவரால் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குஷ்வந்த் சிங் – மார்ச் 20:

குஷ்வந்த் சிங் – மார்ச் 20:

பிரபலமான எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான குஷ்வந்த் சிங் மார்ச் 20 ஆம் தேதியன்று காலமானார். 99 வயதான குஷ்வந்த் சிங், அவருடைய நகைச்சுவை கலந்த எழுத்து, பாரபட்சமற்ற தன்மை, கவிதை மீதான ஈர்ப்பு ஆகியவற்றிற்காக பெரிதும் பாரட்டப்பட்டவர். பல்வேறு பத்திரிக்கைகளில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் நேஷனல் ஹெரால்ட் போன்ற பிரபலமான பத்திரிக்கைகளில் 1970, 1980 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் தன்னுடைய எழுத்துக்களுக்காக பத்ம விபூஷண் விருது பெற்றார் குஷ்வந்த் சிங்.

ஷோக்ரா ஷேகல் – ஜூலை 10:

ஷோக்ரா ஷேகல் – ஜூலை 10:

பாலிவுட்டின் மற்றொரு இழப்பு முன்னாள் கதாநாயகியான ஷோக்ரா ஷேகல். கிட்டதட்ட 7 தலைமுறைகளாக தன்னுடைய நடிப்பினை அர்ப்பணிப்பாக செய்தவர். தன்னுடைய 102 ஆம் வயதில், ஜூலை 10 ஆம் தேதியன்று காலமானார். பத்ம விபூஷண் விருது பெற்ற ஷேகல் மும்பையில் இறுதி மூச்சினை நிறுத்திக் கொண்டார்.

கோபிநாத் முண்டே – ஜூன் 4:

கோபிநாத் முண்டே – ஜூன் 4:

மத்திய கிராமப் புற வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே, ஜூன் 4 ஆம் தேதி காலை டெல்லியில் சாலை விபத்தில் மரணத்தை தழுவினார். 64 வயதான முண்டே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணித்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய முண்டே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாயா ஆங்கிலோவ் – மே 29:

மாயா ஆங்கிலோவ் – மே 29:

அமெரிக்க எழுத்தாளரான மாயா, மே 29 ஆம் தேதியன்று காலமானார். நார்த் கரோலினாவின் வின்ஸ்டன் - சலேமிம் அமைந்துள்ள தன்னுடைய வீட்டில், 86 வயதில் மரணமடைந்தார் மாயா.

ரிச்சர்ட் அட்டன்பரோ– ஆகஸ்ட் 25:

ரிச்சர்ட் அட்டன்பரோ– ஆகஸ்ட் 25:

ஆஸ்கர் விருது பெற்ற பிரிட்டிஷ் இயக்குனரான ரிச்சர்ட் அட்டன்பரோ தன்னுடைய 90 ஆவது வயதில், ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று காலமானார். வெற்றிகரமான இயக்குனராக ஆவதற்கு முன்னர் இவர் பிரபலமான நடிகராக இருந்தார். கிட்டதட்ட 70 ஆண்டுகள், பல்வேறு படங்களை இயக்கிய இவர், பிளாக் பஸ்டர் திரைப்படமான ஜூராசிக் பார்க்கில் நடிப்பில் கலக்கியிருந்தார். காந்தி படத்தின் இயக்குநராக உலகப் புகழ் பெற்றவர்.

அனந்த மூர்த்தி – ஆகஸ்ட் 23:

அனந்த மூர்த்தி – ஆகஸ்ட் 23:

தன்னுடைய சமூக அக்கறை சார்ந்த புதினங்களுக்காக புகழ்பெற்ற கன்னட எழுத்தாளாரான யு.ஆர். அனந்த மூர்த்தி அவர்கள் பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று காலமானார். 82 வயதான இவர் கிட்னி பாதிப்பினால் மரணமடைந்தார்.

ராபின் வில்லியம்ஸ் – ஆகஸ்ட் 11:

ராபின் வில்லியம்ஸ் – ஆகஸ்ட் 11:

ஆஸ்கர் விருது நாயகனான காமெடி நடிகரான ராபின் வில்லியம்ஸ் தன்னுடைய 63 ஆம் வயதில், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். பல்வேறு மன உளைச்சல்களால் பாதிக்கப்பட்டிருந்த இவர், நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். ஒருமுறை ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – நவம்பர் 4:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – நவம்பர் 4:

மாண்டலின் இசையில் இளம் வயதிலிருந்து சாதனைகள் படைத்து வந்த யூ.ஸ்ரீனிவாஸ் தன்னுடைய 45 வயதில் காலமானார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் விளைவுகளால் மரணமடைந்தார்.

ரவி சோப்ரா – நவம்பர் 12:

ரவி சோப்ரா – நவம்பர் 12:

1988 ஆம் ஆண்டில் வெளிவந்த மகாபாரத தொடரின் இயக்குனரான ரவி சோப்ரா, நவம்பர் 12 ஆம் தேதியன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 68.

ஜோன் ரிவெர்ஸ் – செப்டம்பர் 5:

ஜோன் ரிவெர்ஸ் – செப்டம்பர் 5:

அமெரிக்க காமெடி நடிகையும், தொகுப்பாளினியுமான ஜோன் ரிவெர்ஸ் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று நியூயார்க் எம்டி.சினானி மருத்துவமனையில் காலமானார்.

முரளி தியோரா – நவம்பர் 25:

முரளி தியோரா – நவம்பர் 25:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான முரளி தியோரா நவம்பர் 25 ஆம் தேதியன்று காலமானார். 77 வயதான அவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர் எம்பி மிலிந்த் தியோரா என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையின் காங்கிரஸ் தலைவராக 22 வருடங்கள் பதவி வகித்தவர் இவர்.

தேவன் வர்மா – டிசம்பர் 4:

தேவன் வர்மா – டிசம்பர் 4:

பாலிவுட்டின் முன்னாள் நடிகரும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான தேவன் வர்மா டிசம்பர் 4 ஆம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். 78 வயதான தேவன் அங்கூர், கோல்மால், சோரி மேரா கம், பெமிசல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும், சோரி மேரா கம், அங்கூர் ஆகிய படங்களுக்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றுள்ளார்.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் – டிசம்பர் 5:

வி.ஆர்.கிருஷ்ணய்யர் – டிசம்பர் 5:

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், முன்னாள் கேரள அமைச்சருமான வி.ஆர். கிருஷ்ணய்யர், கொச்சியில் டிசம்பர் 5 ஆம் தேதியன்று 100 காலமானார். கடந்த நவம்பர் 15 ஆம் தேதியன்று தன்னுடைய 100 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.பாலச்சந்தர் – டிசம்பர் 23:

கே.பாலச்சந்தர் – டிசம்பர் 23:

தமிழ் திரையுலகில் "இயக்குனர் சிகரம்" என்று புகழப்படும் கே.பாலச்சந்தர் டிசம்பர் 23 ஆம் தேதியன்று தன்னுடைய 84 ஆவது வயதில் காலமானார். திரையுலகத்தில் பிரபலமாக உள்ள நடிகர் கமல் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ள இவர், இதுவரை 48 நடிகர்களுக்கும், 42 நடிகைகளுக்கும், 10 தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முதல் வாய்ப்பை அளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+