உக்ரைனை தொடர்ந்து.. கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை உருவாக்கிய அமெரிக்கா! அலறும் வடகொரியா
சியோல்: வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் கடந்த 70 ஆண்டுகளாக தென் கொரியா கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்கொரியாவுக்கு உதவும் வகையில் அமெரிக்கா நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. இன்று இரண்டாவது நீர் மூழ்கி கப்பல் தென்கொரியாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் உருவாகியிருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஆசியா மீது எப்போதுமே ஒரு கண் இருந்து வருகிறது. இதற்கு காரணம் ஆசியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதுதான். ஆனால் அமெரிக்காவால் சீனாவில் வெற்றிகரமாக நுழைய முடியவில்லை. எனவே இதன் கவனம் ரஷ்யா மற்றும் இந்தியா மீது இருக்கிறது. ரஷ்யாதான் உலகின் மிகப்பெரிய நாடு. அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியும் அதிகம். அதேபோல இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகம். ஆனால் வாங்கும் சக்தி குறைவு.

இது தவிர கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் மீதும் அமெரிக்காவுக்கு கண் இருக்கிறது. இதற்காக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் கைகோர்த்திருக்கிறது. என்னதான் முட்டி மோதினாலும் அமெரிக்காவுக்கு என சில எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதில் முன்னணியில் சீனா, ரஷ்யா, வடகொரியா இருக்கிறது. இதில் வடகொரிய பொருளாதாரத்திலும், பரப்பளவிலும் சிறிய நாடு. அவ்வளவு பெரிய ரஷ்யாவையே எதிர்க்க துணிந்த அமெரிக்கா, வடகொரியா மேட்டரில் கொஞ்சம் அமைதி காத்து வந்தது.
காரணம் அந்நாடு வைத்திருக்கும் ஆயுதங்கள்தான். சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் வடகொரியா அதை கண்டுகொள்ளவே இல்லை. 'என்னடா நம்ம என்ன பண்ணாலும் எதையும் கண்டுக்காமா இருக்கு' என பார்த்த அமெரிக்கா, தென்கொரியாவுடன் கைகோர்க்க தொடங்கியது. ஏற்கெனவே தென்கொரியாவுடன் பழக்கம் இருந்ததுதான். ஆனால், வடகொரியா சம்பவத்திற்கு பின்னர் அது இந்த உறவை பலப்படுத்திக்கொண்டது.
இப்படியாக வருஷத்துக்கு பாதி நாட்கள் எதையாவது பெயர் வைத்து கொண்டு தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா என கூட்டு ராணுவ பயிற்சிக்கு அமெரிக்கா கிளம்பிவிடும். இதை எதிர்த்து வடகொரியாவும் அடிக்கடி ஏவுகணைகளை ஏவி சோதனை செய்யும். இப்படியே போய்க்கொண்டிருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்கா ஓரடி முன் வந்துள்ளது. அதாவது தென் கொரியாவுக்கு அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலான கென்டக்கியை சில நாட்களுக்கு முன்னர் அனுப்பி வைத்தது.
இது கொரிய தீபகற்பத்தில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கியது. இந்நிலையில் இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது இரண்டாவது நீர் மூழ்கி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இந்த கப்பல் இன்று தென்கொரியாவை வந்தடைந்துள்ளது. அனபோலிஸ் எனும் பெயர் கொண்ட இந்த கப்பல் அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்டது கிடையாது. ஆனால், நீர் மூழ்கி கப்பல், போர்க்கப்பல் போன்றவற்றை சிறப்பாக எதிர்க்க வல்லது. கடந்த 1980ம் ஆண்டுக்கு பின்னர் கொரிய தீபகற்பத்தில் நுழையும் முதல் அமெரிக்க அணு ஆயுத கப்பல் கென்டக்கிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications