For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்குப் பின் தந்தையுடன் பேசிய பாக். முன்னாள் பிரதமர் மகன்!!

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப்ராசா கிலானியின் மகன் அலிஹைதர் கிலானி தலிபான் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் தனது தந்தையுடன் செல்போனில் பேசியுள்ளார்.

2013ஆம் ஆண்டு மே 9-ந் தேதி பாகிஸ்தானின் பஞ்சாம் மாநிலத்தில் இருந்து தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார் கிலானியின் மகன் அலிஹைதர்.

Former Pakistan PM Gilani speaks to son abducted 2 years ago

கடந்த 2 ஆண்டுகளாக கிலானி மகன் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் எதிர்பாராத வகையில் அவர் தனது தந்தை கிலானியிடம் செல்போன் மூலம் பேசியுள்ளார்.

தான் அடையாளம் தெரியாத இடத்தில் நலமாக இருப்பதாகவும், தாய் மற்றும் குடும்பத்தார் நலம் குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமரின் மகன் கடத்தப்பட்டு 2ஆண்டுகாலம் கழித்து பேசியிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Pakistan's former prime minister Yousuf Raza Gilani today said he had spoken to his son Ali Haider for the first time since he was kidnapped by a Taliban group in 2013 and is now being held in Afghanistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X