For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாரிஸ் தீவிரவாத தாக்குதல்-பிரான்ஸில் எமெர்ஜென்சி பிரகடனம்; எல்லைகள் மூடல், ராணுவம் குவிப்பு

Google Oneindia Tamil News

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குள் புகுந்துள்ள தீவிரவாதிகள் நடத்திவரும் தாக்குதல்களை அடுத்து அங்கு தேசிய அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரான்ஸ் நாட்டின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.

தலைநகர் பாரிஸில் நடைபெற்ற துப்பாக்கி தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை படாக்லன் கலை காட்சியகத்தில் 100 பேரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துவைத்து படுகொலை செய்தனர்.

France Declared a State of Emergency

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் நடைபெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் குறைந்தது 160 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

பாரிஸ் நகரில் உள்ள மூன்று உணவகங்கள், ஒரு கலையரங்கம், தேசிய விளையாட்டு மைதானம் அருகே ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச்சூடுகளும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த தொடர்தாக்குதல்களை அடுத்து நள்ளிரவுக்கு முன்னதாக பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே அவசர நிலை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் தப்பிச் செல்லமுடியாதவாறு நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், பாரிஸில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளே இருக்கும் படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

English summary
French President François Hollande declared a rare state of emergency on Friday after a series of terror attacks left more than 100 people dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X