"மரண ஓலம்.." 1400 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாக்கிய 5.2 ரிக்டர் நிலநடுக்கம்
காபூல்: தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள முக்கிய நாடு ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பூகம்பத்தில் 1,400 பேர் உயிரிழந்தனர். மேலும், பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்குச் சீரமைப்புப் பணிகளில் நடந்து வரும் சூழலில் மீண்டும் அங்கு வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 1400 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். மேலும், பலர் தங்கள் வாழ்விடங்களை இழந்தனர். இந்த நிலநடுக்கம் ஆப்கனில் வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், அங்கு மீட்புப் பணிகள் மெல்ல நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. 5.2 ரிக்டரில் ஏற்பட்ட இந்தப் பூகம்பம் ஞாயிறு நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அருகில் தான் மையம் கொண்டு இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பாளர் எசானுல்லா கூறுகையில், "முதல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குனார் மாகாணத்தில் தான் இந்த பூகம்பமும் உணரப்பட்டது. பொதுவாகவே முதலில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு பின்னதிர்வுகள் தொடர்ச்சியாக ஏற்படும். அதுபோன்ற பின்னதிர்வு தான் இது. இந்த பின்னதிர்வுகள் கூடுதல் உயிரிழப்புகளை இதுவரை ஏற்படுத்தவில்லை" என்றார்.
1400+ உயிரிழப்பு
அதேநேரம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குனார் மாகாணத்தில் மட்டும் 1,411 பேர் உயிரிழந்ததாகவும், 3,124 பேர் காயமடைந்ததாகவும் தாலிபான் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும். அதேபோல அண்டை மாகாணமான நங்கர்ஹாரில் மேலும் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
நிலைமை மோசம்
ஆப்கானிஸ்தான் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். 2021இல் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டிற்குக் கிடைக்கும் உதவிகளும் குறைந்துவிட்டன.. இதனால் இதுபோன்ற பேரிடர்களுக்குப் பதிலளிக்கும் திறன் ஆப்கானிஸ்தானுக்கு இல்லை. பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவு ஆப்கனில் பல லட்சம் பேரை பாதிக்கலாம் என்று ஆப்கானிஸ்தானுக்கான ஐநா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் இந்திரிகா ரத்வட்டே கூறினார்.
குனாரில் 5,400க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இரவு பகலாகத் தேடுதல் பணிகள் தொடர்ந்தன என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹம்டுல்லா ஃபிட்ரத் தெரிவித்தார். பாதிப்புகள் மிக மோசமாக இருந்ததால் பல பகுதிகளைச் சாலை வழியாக அடைய முடியவில்லையாம். இதனால் மாற்று வழிகள் குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.
மோசமான பாதிப்பு ஏன்
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்தில் இருந்து சுமார் 27 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இது பூமியின் மேற்பரப்பிற்கு வெறும் எட்டுக் கிலோமீட்டர் கீழே ஏற்பட்டது. இதுபோல ஆழமற்ற நிலநடுக்கங்கள் அதிகச் சேதத்தை ஏற்படுத்தும்.. ஆப்கானிஸ்தானில் கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மண் செங்கல் மூலமே கட்டப்படும் நிலையில், அவை நிலநடுக்கங்களைத் தாங்காது. லேசான ரிக்டர் பூகம்பம் ஏற்பட்டாலே அவை அழிந்துவிடும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications