இஸ்ரேல் ராணுவ தாக்குதலுக்கு காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்வு
காஸா: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், அண்டை நாடான பாலஸ்தீனத்தில் உள்ள காஸாவை ஆளும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த 8ம் தேதி முதல் போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இஸ்ரேல் ராணுவம் காஸாவில் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பில் இருந்து தரை வழியாகவும் இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது.

திங்கட்கிழமை நடந்த தாக்குதலில் 55 பேர் பலியாகினர். மேலும் அதற்கு முந்தைய நாள் நடந்த தாக்குதலில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டன. இதயைடுத்து இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 572 ஆக அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்ட 55 பேரில் மூன்றில் ஒரு பங்கு பேர் குழந்தைகள் ஆவர். ரஃபாவில் இஸ்ரேல் வான் வெளித் தாக்குதல் நடத்தியபோது சேதம் அடைந்த ஒரு வீட்டில் 7 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் காஸா நகரில் உள்ள ஒரு வீடு தாக்கப்பட்டதில் 4 குழந்தைகள் பலியாகினர்.
காஸாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர்.
இது தவிர 2 பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications