Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 வருஷம் ஆச்சு! அப்படியே இருக்கும் வீரரின் உடல்.. துளியும் கெட்டு போகல! வியக்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

பெர்ன்: சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஒருவரது உடல் துளியும் அழுகிப் போகாமல் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆனால், அது உண்மைதான். அது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.

உலகெங்கும் சாகச பிரியர்கள் அதிகம் விரும்பும் ஒரு சாகசம் என்றால் அது மலை ஏறுவது. உலகில் இருக்கும் பெரிய பெரிய மலைகளில் ஏறுவதே இவர்களின் பொழுது போக்கு. இருப்பினும், இதில் பல ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது.

 German climber body found after almost 40 years in Switzerland

லைட்டாக கவனக்குறைவாக இருந்தால் கூட அங்கே மேலே பல நூறு மீட்டர் உயரத்திலேயே நமக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். அங்கு உயிரிழப்பே கூட ஏற்படும். அந்தளவுக்கு மோசமாக இருக்கும்.

40 ஆண்டுகளுக்கு முன்பு: அந்த உயரத்தில் இருப்பதாலும், அங்குப் பனி மிக அதிகம் பெய்யும் என்பதாலும் உடலை மீட்டு வருவது கூட முடியாத ஒன்றாகவே இருக்கும். இதற்கிடையே அப்படி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஒருவரின் உடலை இப்போது சிலர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர். தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற மேட்டர்ஹார்ன் சிகரத்தின் தென்கிழக்கே பனிப்பாறையில் தான் இந்த உடலை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த உடல் துளி கூட அழுகிப் போகாமல் அப்படியே இருந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் அது 37 ஆண்டுகளுக்கு முன்பு அங்குக் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரின் சடலம் என்பது உறுதியாகியுள்ளது.

என்ன காரணம்: புவி வெப்ப மயமாதல் காரணமாக இதுபோல பல இடங்களில் பனிப்பாறை உருகுவது அதிகரித்து வருகிறது. பல காலமாகப் பனியால் சூழ்ந்து இருந்த இடங்களும் கூட இப்போது உருக ஆரம்பித்துள்ளது. இதனால் கடந்த சில காலமாகவே இதுபோல பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலையேறும் வீரர்கள், பனிச்சறுக்கு வீரர்களின் உடல்கள் கண்டறியப்படுவது அதிகரித்துள்ளது.

யார் இவர்: இப்போது கண்டறியப்பட்ட நபர் 1986 செப்டம்பரில் மாயமானவர் என்றும் அவர் 38 வயதான ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது இவர் மாயமான போதே தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்துள்ளது. இருப்பினும், பல நாட்கள் ஆன பிறகும் அவரது சடலத்தைக் கண்டறிய முடியாத நிலையில், தேடும் பணி கைவிடப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரது சடலம் கண்டறியப்பட்டுள்ளது.

 German climber body found after almost 40 years in Switzerland

கடந்த மாதம் அவர்கள் இந்த சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இத்தாலிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பனியால் சூழப்பட்ட தியோடுல் மலையில் அவர்கள் ஏறும் போது, இவரது உடலைக் கண்டுபிடித்தனர். அவர்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சடலம் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மரபணு சோதனையில் அவர் யார் என்பது உறுதியானது. இருப்பினும், அவர் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மோசமான ஆபத்து: காலநிலை மாற்றம் காரணமாகப் பனிப்பாறைகள் வேகமாக உருகி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கிறது. கால நிலை மாற்றம் எந்தளவுக்கு வேகமாக நடக்கிறது.. இது எந்தளவுக்கு மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் இது காட்டுகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள பனி சூழ்ந்த மலைகளே இப்போது வேகமாக உருகி வருகிறது.

முன்னதாக கடந்தாண்டு சுவிட்சர்லாந்தில் இதுபோல ஒரு சடலம் கண்டறியப்பட்டது. 2018இல் மலையேறும் போது மாயமான 58 வயதான கோடீஸ்வரர் கார்ல்-எரிவன் ஹாப் என்பவர் பனிச்சறுக்கு செய்யும் போது மாயமான நிலையில், அவரது சடலமும் சமீபத்தில் கண்டறியப்பட்டது. 4 ஆண்டுகளாக அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு தான் அவரது சடலம் கண்டறியப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+