For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.3.4 கோடி லாட்டரி பரிசுத் தொகையை டாய்லெட்டில் பிளஷ் செய்த 'குடி'மகள்

By Siva
Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் லாட்டரியில் கிடைத்த ரூ. 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 ரொக்கத்தை பெண் ஒருவர் குடிபோதையில் கிழித்து அதை டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்துவிட்டார்.

ஜெர்மனியில் உள்ள எஸ்ஸன் நகரைச் சேர்ந்தவர் ஏஞ்சலா மெய்யர்(63). அவருக்கு ஜெர்மன் தேசிய லாட்டரியில் ரூ. 3 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 772 பரிசு கிடைத்தது. இந்நிலையில் அவரது கணவர் இறந்த பராமரிப்பு இல்லத்தில் இருந்து ஏஞ்சலாவுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அவரின் கணவரின் மருத்துவ செலவுக்கான தொகையை செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தை பிரித்துப் படித்த ஏஞ்சலா ஆத்திரம் அடைந்தார். தனக்கு பரிசாக கிடைத்த பணத்தை யாருக்கும் கொடுக்க விரும்பாத அவர் 5 பாட்டில் ஷாம்பெய்னை குடித்தார். இதையடுத்து அவர் குடிபோதையில் பரிசுத் தொகையை கிழித்து டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்துவிட்டார்.

பெண் ஒருவர் ரூ.3.4 கோடி பணத்தை டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
A 63-year-old German woman who won a 330,000 pound lottery tore the cash into pieces and flushed it down the toilet after getting drunk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X